தாம் சுயநினைவிழந்திருந்த போது தமது இரத்தம் எடுக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

304
தாம் சுயநினைவிழந்திருந்த போது தமது இரத்தம் எடுக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

வத்தளை பிரதேசத்தின் 49 வயதான பெண் ஒருவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இனந்தெரியாத ஒருவர் அல்லது பலர் தமது இரத்தத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தவேளையில் தாம் சுயநினைவிழந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் வத்தளை சென்அந்தனீஸ் தேவாலயத்துக்கு முன்னால் தாம் கைவிடப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டதாக பெண் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமையன்று பணிக்கு செல்லும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும் முச்சக்கர வண்டியின் சாரதியை பெண்ணால் அடையாளப்படுத்த முடியவில்லை.

SHARE