தாய்லாந்து நாட்டில் பெண் ஒருவர் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி சென்ற காதலனுக்கு கருக்கலைப்பு செய்த கருவை பார்சல் மூலம் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

172

 

தாய்லாந்து நாட்டில் பெண் ஒருவர் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி சென்ற காதலனுக்கு கருக்கலைப்பு செய்த கருவை பார்சல் மூலம் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19-1426753816-selfie2344

தாய்லாந்து சாம் ராங் நூவா மாவட்டத்தை சேர்ந்த வேவ் ( 21) என்பவர் 25 வயது தாய்லாந்து வாலிபரை காதலித்து வந்தார். காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். இந்த நிலையில் காதலி வேவ் கர்ப்பமடைந்தார்.

வேவ் பலமுறை சென்று காதலரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சி கேட்டு பார்த்து உள்ளார்.

ஆனால் இதனை கண்டுகொள்ளாத காதலன், அவரைவிட்டு விட்டு மற்றொரு பெண் மீது காதல் வயப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காதலி ஒரு மருத்துவமனையில் தனது 28 வார கருவை கலைத்துவிட்டு, மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரியாமல் வெளியே வந்த அவர், கருவை நன்கு துணியில் சுற்றி பார்சல் மூலமாக தனது முன்னாள் காதலன் வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

காதலனின் வீட்டில் காதலனின் சகோதரி அந்த பார்சலை பெற்று உள்ளார். அதை பிரித்து பார்த்த போது அதில் இருந்த குறைமாத கருவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE