கடந்த ஐந்தாம் தேதியன்று மன்னரின் வயிற்றுப்பகுதியை எக்ஸ்-ரே எடுத்துபார்த்தபோது அவரது பித்தப்பை வீங்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். நேற்றிரவு 9.45 மணியளவில் மன்னரின் வயிற்றுக்குள் கேமராவை அனுப்பிய மருத்துவர்கள் பின்னர் பித்தப்பையை வெற்றிகரமாக அகற்றினர். 20 நிமிடத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவித்த மருத்துவர்கள் மாட்சிமை பொருந்திய மன்னர் பின்னர் தனது அறைக்கு மாற்றப்பட்டதாக கூறினர்.
காலையில் அவரது இதய துடிப்பு குறைந்து காணப்பட்டதாகவும், ரத்த அழுத்தம் சீராக இருந்ததாகவும், காய்ச்சலும் குறைவாக காணப்பட்டதாகவும் தெரிவித்த மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலையை தீவிரமாக கவனித்து வருவதாகவும் தேவையான மருந்துகள் உடனுக்குடன் அவருக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து பிரதமர் பதவியை கைப்பற்றிய ராணுவ தளபதி பிரயுத் சான்-ஓச்சா மருத்துவமனைக்கு சென்று மன்னரை பார்த்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.