திடீர் கண்காணிப்பு விஜயம்

53

(நூருல் ஹுதா உமர்)

இரவு நேரத்தில் ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் குழுவினர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.ரிபாஸ் இந் அறிவுறுத்தலுக்கு அமைவாக பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம் பீ அப்துல் வாஜித், தர முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் பீ.ஜீ.பீ.டேனியல் உள்ளிட்ட குழுவினர் குறித்த வைத்தியசாலைக்கு சென்று கண்காணிப்புகளை மேற்கொண்டிருந்தனர்.

இவ் விஜயத்தின் போது வைத்தியசாலை உத்தியோகத்தர்களை சந்தித்து குறை நிறைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன் பதிவேடுகளையும் மேற்பார்வை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

அதன் தொடர்ச்சியாக பெரிய நீலாவனை ஆரம்ப பராமரிப்பு சுகாதார பிரிவிற்கும் விசேட குழு ஒன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது. பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாக குறித்த குழுவினர் பெரிய நீலாவனை வைத்தியசாலைக்கு சென்று கண்காணிப்பு களை மேற்கொண்டதுடன் சுகாதார  உத்தியோகத்தர்களிடம் குறைநிறைகளைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ.வாஜித் தலைமையிலான சுகாதார உத்தியோகத்தர்கள் குறித்த கண்காணிப்பு விஜயத்தில் பங்குபற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE