தினப்புயல் பத்திரிகையின் 100வது வார இதழ் வெளியீட்டினை முன்னிட்டு வாழ்த்துச்செய்திகள்

420

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான அமைச்சர். றிஷாத் பதியுதீன் அவர்களின் வாழ்த்துச்செய்தி

தமிழ்பேசும் மக்களின் குரலாக வாராந்தம் வெளிவரும் தினப்புயல் தனது நூறாவது இதழை100 ethal copy எட்டியிருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. தமிழ்பேசும் மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதிலும், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதிலும், நாளாந்த பிரச்சினைகளை உடனுக்குடன் வெளிக்கொணர்ந்து தீர்வு காண்பதிலும் தினப்புயல் ஆற்றிய சேவைகளை மனதார வாழ்த்துகின்றேன். எதிர்காலத்திலும் தமிழ்பேசும் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டுமென்றும் விஷேசமாக வடக்கு மக்களின் அவலக்குரலுக்கு உறுதுணையாக பத்திரிகைத் தர்மத்தை பேணியும், வடமாகாண மக்களின் கலாச்சார விழுமியங்களை பேணி பணியாற்ற வேண்டி நிற்கின்றேன்.

நன்றி.

அல்ஹாஜ்.றிஷாத் பதியுதீன் (பா.உ)
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்.
வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர்.

 

அமைச்சர் வே.ராதாகிருஸ்ணன் (தாவரவியல் மற்றும் பொழுதுபோக்கு அமைச்சர்) அவர்களின் வாழ்த்துச்செய்தி.

100வது இதழில் கால்பதிக்கும் தினப்புயல் பத்திரிக்கைக்கும், அதன் ஆசிரியருக்கும் எனது உளம் கனிந்தவாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், மலையகத்தின் செய்திகளையும் உள்ளடக்கி நாடுமுழுவதிலும் பத்திரிக்கை விற்பனையை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மென்மேலும் உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

 

Uthayarasa சிறிரெலோக் கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின்  வாழ்த்துச்செய்தி

தினப்புயல் பத்திரிகையானது 02வது வருடத்தில் 100வது இதழில் காலடி  எடுத்துவைப்பதை முன்னிட்டு வாழ்த்துக்ளை தெரிவிப்பதோடு, 100 ethal copy இப்பத்திரிகையில் காணக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால் நடுநிலை  தவறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எத்தரப்பு பிழைகளைச்  செய்தாலும் அவற்றை சுட்டிக்காட்டி அத்தவறினை விடாது  திருந்துவதற்கான வழியினையும் அப்பத்திரிகை எழுதிக்கொள்ளும்.  அந்தவகையில் வடமாகாணசபைத் தேர்தல் காலங்களில் தான்  இப்பத்திரிகை என் கைகளில் கிடைக்கப்பெற்றது.

இவர்களுடைய பத்திரிகையில் முகப்பானது ஒரு கவர்ச்சிகரம் கொண்டது. பார்த்தவுடன் மக்கள் பெற்றுக்கொள்ளுமளவிற்கு அமையப்பெற்றுள்ளது. இருந்தபோதிலும் தமிழ்த்தேசியம் தொடர்பில் அதிகமான கட்டுரைகள் அமையப்பெற்றுள்ளன. தொடர்ந்தும் இப்பத்திரிகை தனது நடுநிலையை கடைப்பிடித்து தினசரியாக வெளிவரவேண்டும் என்று 100வது இதழில் காலடிவைக்கும் தினப்புயல் பத்திரிகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

Mano-ganesan மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்களின் வாழ்த்துச்செய்தி

தினப்புயல் பத்திரிகையானது வன்னி மண்ணிலிருந்து 02 வருடத்தில் 100 ethal copy 100வது இதழில் கால்பதிப்பதனை முன்னிட்டு மலையக மக்கள்  முன்னியின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்  தெரிவித்துக்கொள்கின்றேன். குடந்த 02 வருடத்திலும் பல்வேறு  சவால்களுக்கு முகங்கொடுத்து இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் மக்களிடையே சென்றடைந்துள்ளது என்பது சவாலான விடயமாகும். யுத்தம் நிறைவடைந்த பின்னர் வன்னி மண்ணில் தமிழ்த்தேசிய உணர்வுகளை வெளிப்படுத்தி போராட்ட படங்கள் வரலாறுகள் சகிதம் மக்கள் மத்தியில் இப்பத்திரிகையானது இடம்பிடிக்க ஒரு காரணமாகஅமைகின்றது.

முலையத்திலும் பல்வேறு கட்சிகள் தொடர்பாகவும் உள்ளதை உள்ளபடி மிகத் துணிச்சலோடு நடுநிலைமை வகித்துவரும் தினப்புயல் பத்திரிகைக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றறேன்.

 

ஆர்.யோகராஜன் (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் வாழ்த்துச்செய்தி.
100வது வாரத்தை எட்டும் தினப்புயலிற்கு என் வாழ்த்துக்கள்! மலையக செய்திகளையும் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுகொள்வதோடு உங்கள் வளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்

 

maskeliya திரு.செ.திருகோணப்பெருமாள் து.P (செயலாளர் மஸ்கெலிய இந்துமாமன்றம்,100 ethal copy  பேராளார் அகில இலங்கை இந்துமாமன்றம்) அவர்களின் வாழ்த்துச்செய்தி.
தொடர்ச்சியாக 99 வாரங்கள் தினப்புயல் பத்திரிகை வெளிவந்து 100வது  இதழை எட்டியுள்ளதை முன்னிட்டு மிகமகழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.  தொடர்ந்தும் நடுநிலை செய்திகளையும், மலையக செய்திகளையும்  இணைத்து வெளியிட்டு வாசகர் ஆதரவை பெற்றுகொள்ளவேண்டும் என  வாழ்த்துகிறேன்.

 

 

திரு.கே.ராஜ்குமார் (அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்) அவர்களின் வாழ்த்துச்செய்தி.

100வது வார இதழை எட்டும் தினப்புயல் பத்திரிகைக்கும், அதன் ஆசிரியருக்கும் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

100 ethal copy

SHARE