திரிஷாவின் திருமணம் நின்றதற்கு அவரது தாயர் உமா பிரபல வார இதழுக்கு பேட்டியளித்தார்.

388

நடிகை த்ரிஷாவுக்கும், படஅதிபர் வருண்மணியனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்த திருமண நிச்சயதார்த்தம் திடீரென ரத்தாகி திருமணம் நின்று போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதுகுறித்து இருவரும் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் த்ரிஷா திருமணம் நின்றது குறித்து அவரது தாயார் உமா பிரபல வார இதழுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது

download (1)

“திருமணத்திற்கு பிறகு த்ரிஷா நடிப்பது அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்று கூறுவதில் சிறிதும் உண்மையில்லை. “த்ரிஷா சினிமாவுல நடிக்கிறார் என்று தெரிந்துதான் பொண்ணு பார்க்க வந்தாங்க. திருமணத்திற்கு பின்பும் நடிக்கலாம் என்று த்ரிஷாவை, வருண் உற்சாகப்படுத்திவந்தார். அதுதான் நிஜம். த்ரிஷா நடிக்கக்கூடாதென்று வருண் குடும்பத்தார் கூறியிருந்தால் நாங்க புதுப் படங்களை ஒப்புக்கொண்டிருக்க மாட்டோம். “த்ரிஷா கல்யாணம் நின்னறுபோன விஷயத்துல பெரியவங்க பலபேர் சம்பந்தப்பட்டு இருக்காங்க.

hqdefault trisha engagement 5454d

 

அதுமட்டுமல்ல இன்னும் நிறையபேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரின் மீதும் எனக்கு நல்ல மரியாதை உண்டு. “அதனால் அனைத்தையும் பேச முடியது. பேசுவது நாகரீகம் கிடையாது. பெரியவங்களோட மனசு காயப்படுவதற்கு நாங்க காரணமா இருக்க விரும்பவில்லை. சில விஷயங்கள் சரிப்பட்டு வரவில்லை என்றால் பிரிந்து விடுவது நல்லது. த்ரிஷா இனி தான் ஒப்புகொண்ட படங்களில் கவனம் செலுத்துவார்” – என்று கூறினார்.

SHARE