‘தூங்காவனம்’ படத்தில் கமல், திரிஷா ஜோடியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.ஏற்கனவே ‘மன்மதன் அம்பு’ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.இந்த படபத்தில் கமல் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்படத்துக்காக வெளியிடப்பட்ட போஸ்டர்களில் துப்பாக்கியுடன் சைக்கோ வில்லன் போல் தெரிகிறார். எனவே அவரது கேரக்டர் பற்றி உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ரகசியமாக வைத்துள்ளனர்.
படப்பிடிப்பில் கமல் உதவி இயக்குனர், ஒளிப்பதிவு உதவி, சக நடிகர்களுக்கு நடிப்பு, வசனம் சொல்லி கொடுத்தல் என அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்வது உண்டு.அதை நிரூபிக்கும் வகையில் தூங்காவனம் படப்பிடிப்பில் திரிஷாவுக்கு மேக்கப் போட்டு விடும் படங்கள் வெளிவந்துள்ளன. பிரகாஷ்ராஜுக்கும் மேக்கப் போட்டுள்ளார். இந்த படங்களை திரிஷா தனது டுவிட்டரில் வெளியிட்டு சந்தோஷப்பட்டு உள்ளார்.கமலின் பாபநாசம், விஸ்வரூபம்–2 படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு காத்து இருக்கின்றன. முதலாவது பாபநாசம் படம் வெளியாக உள்ளது. ’விஸ்வரூபம்’ படம் நிதி நெருக்கடியால் தாமதமாகுவதாக கூறப்படுகிறது. எனவே அந்த படத்தின் உரிமையை கமலே வாங்கி வெளியிட திட்டமிட்டு உள்ளார்.