திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் உள்ள இர­க­சியகோத்தா முகாம் இரகசியங்கள் வெளிவருமா,?

525

 

திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் உள்ள இர­க­சியகோத்தா முகாம் இரகசியங்கள் வெளிவருமா, முகா­மொன்றில் 700 பேர் தடுத்து வைக்­கப்­பட்டு அந்த முகா­முக்கு கோத்தா முகாம் எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கடந்த19 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கின்ற போது தெரி­வித்த தக­வ­லா­னது நாட்­டிலும் சர்­வ­தேச அள­விலும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் தொடங்­க­வி­ருக்­கின்ற காலங்­க­ளி­லெல்லாம் இவ்­வா­றான பர­ப­ரப்­பான தக­வல்­களும் அதிர்ச்சி தரும் செய்­தி­களும் வெளி­வ­ரு­வது இலங்­கை­ய­ர­சாங்­கத்­துக்கு பாரிய சவால்­களை உண்டு பண்­ணி­யி­ருக்­கி­றது என்­பது கடந்த கால அனு­ப­வங்­களைக் கொண்டு அறிய முடியும்.

Sena_Srilanka-150x150 a DSCN3608

IMG_20150529_092518

DSCN3609 indian-ship-1 indian-ship-2

2012 ஆம் ஆண்டு ஒக்­டோ­பரில் மனித உரிமை மாநாடு நடை­பெற்ற வேளையில் (மனித உரிமைப் பேர­வையின் பூகோள கால மீளாய்­வுக்­கூட்டத் தொடர்) 31.10.2012 இல் நடை­பெற்ற வேளையில் அனைத்து மனித உரிமை ஆர்­வ­லர்­களும் சர்­வ­தேச நாடு­களின் பிரதிநிதிகள் 100 பேருக்கு மேற்­பட்­டோரும் 50 க்கு மேற்­பட்ட அமைப்­புக்­களும் கலந்து கொண்­டி­ருந்த வேளையில் மன்­னா­ரி­லி­ருந்து மறை மாவட்ட ஆயர் இரா­யப்பு யோசப் தொலைத்­தொ­டர்பு மூலம் (ஸ்கைப்) தெரி­வித்த கருத்தும் தக­வலும் மனித உரிமை ஆர்­வ­லர்­களை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­ய­துடன் உல­கத்­தையே ஜெனிவாப் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்­தது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்­தத்தின் போது காணாமல் போனோர் ஒரு லட்­சத்து 40 ஆயிரம் பேர். இந்த காணாமல் போன தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு இது­வரை பொறுப்புக் கூற­வில்லை.

சர­ண­டைந்த போரா­ளிகள் மீள்­கு­டி­யேற்றம் மனித உரிமை மீறல்கள் காணிப் பறிப்பு போன்ற பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை இலங்கை அரசு மீது அவர் சுமத்­தி­யது இலங்­கை­ய­ர­சுக்கு பாரிய நெருக்­க­டியை உரு­வாக்­கி­யி­ருந்­தது.

அது மட்­டு­மன்றி பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்கா மீது இக்­காலப் பகு­தியில் கொண்டு வரப்­பட்ட குற்றப் பிரே­ரணை இலங்­கை­ய­ர­சாங்­கத்­துக்கு சங்­க­ட­மான சூழ்­நி­லையை உரு­வாக்­கி­யி­ருந்­தது. இது போன்­ற­தொரு இன்­னு­மொரு நெருக்­க­டியை இலங்­கை­ய­ர­சாங்கம் சந்­தித்த ஆண்­டாக கரு­தப்­ப­டு­வது 2013 ஆம் ஆண்­டாகும்.

மனித உரிமை மாநாடு ஜெனி­வாவில் நடை­பெ­று­வ­தற்கு சில நாட்­க­ளுக்கு முன் சனல் 4 இனால் வெளி­யி­டப்­பட்ட விடு­தலைப் புலி­களின் நிகழ்ச்சித் தொகுப்­பாளர் இசைப்­பி­ரி­யாவின் காணொளிக் காட்சி உல­கத்­தையே உலுக்­கி­யது.

இக்­கா­ணொ­ளியைப் பார்த்த பெண்­ணிய அமைப்­புக்­களும் மனித உரிமை அமைப்­புக்­களும் சினம் கொண்டு கர்ச்­சித்­தன. கடந்த வருடம் மார்ச் மாதம் நடை­பெற்ற (3.3.2014 –- 28.3.2014) ஜெனிவா மனித உரிமை மாநாட்டின் போது இலங்­கையின் நன்­ம­திப்பை கெடுக்கும் இரு சம்­ப­வங்கள் பதி­யப்­பட்­டன. இது நேர­டி­யா­கவே இலங்­கையின் மனித உரிமை மீறல் பற்­றிய சுட்­டிக்­காட்­ட­லாக அமைந்­தது. அதில் ஒன்­றுதான் சனல் 4 இனால் வெளி­யி­டப்­பட்ட கொலைக்­களம் என்னும் ஆவ­ணப்­படம்.

மற்­றது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் ஜெனிவா மனித உரி­மை­யா­ணை­யா­ள­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட 160 பக்கம் கொண்ட அறிக்கை. இந்த அறிக்­கையில் இலங்­கையில் முஸ்­லிம்கள் எதிர்­கொள்­கின்ற பல்­வேறு பிரச்­சி­னைகள் சுட்­டிக்­காட்­டப்­பட்டு இலங்­கை­யி­லுள்ள இன­வாத அமைப்­புக்­க­ளாலும் ஒரு சில பௌத்த குரு­மார்­க­ளி­னாலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் மதப் பண்­பா­டு­க­ளுக்கும் இழைக்­கப்­பட்டு வரும் கொடு­மைகள் பற்றி சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கை­யாக அது இருந்­த­தாகக் கூறப்­பட்­டது.

இவை­யெல்­லா­வற்­றுக்கும் மேலாக விடு­தலைப் புலி அமைப்பின் தலை­வரின் மகன் பாலச்­சந்­தி­ரனின் படு­கொலை சம்­பந்­த­மான விவ­ரணப் படம் போன்­றவை கடந்த வருடம் ஜெனி­வாவின் அக்­கினி சாட்­சி­யங்­க­ளாக இருந்த நிலை­யில்தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரனின் திரு­கோ­ண­மலை கோத்­தா முகாம் சம்­பந்­த­மான அறிக்கை அதிர வைக்கும் தக­வ­லாக வெளி­வந்­துள்­ளது.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பாயவின் பெய­ருடன் திரு­கோ­ண­ம­லையில் கடற்­படை முகாமில் 700 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன் 35 க்கு மேற்­பட்ட குடும்­பங்­களும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அவர் பாரா­ளு­மன்றில் தெரி­வித்­தி­ருந்தார்.

ஜெனிவா மனித உரிமை பேரவை மாநாடு எதிர்­வரும் மார்ச் மாதத்தில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருக்­கின்ற வேளையில் இப்­ப­ர­ப­ரப்பு ஊட்டும் தகவல்கள் வெளி­வந்­துள்­ளன. இலங்­கையின் இனக்கலவரம் வெடித்­த­தாக கூறப்­படும் 1983 ஆம் ஆண்டு காலப் பகு­தி­யி­லி­ருந்து கடந்த 2012 ஆம் ஆண்டு வரை­யுள்ள சுமார் 30 வருட கால வர­லாற்று அடை­யா­ளங்­களில் திரு­கோ­ண­மலைப் பிர­தே­ச­மா­னது ஒரு கொலைக்­க­ள­மா­கவே பார்க்­கப்­பட்டு வந்­துள்­ளது என்­ப­தற்கு இந்த முப்­பது வருட கால பதி­வுகள் சாட்­சி­யங்­க­ளாக நிற்­கின்­றன.

திரு­கோ­ண­ம­லையில் 1983 ஆம் ஆண்­டுக்குப் பின் இடம்­பெற்ற பல்­வேறு சம்­ப­வங்கள் மனித உரிமை மீறல்கள் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச அள­விலும் பாரிய அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது என்­ப­தற்கு அவ்வவ் காலத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்­களே சாட்­சி­யங்­க­ளாக அமைந்து காணப்­ப­டுகின்றன.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி யாழ். திரு­நெல்­வே­லியில் வைக்­கப்­பட்ட கண்­ணி­வெடி கார­ண­மாக 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர். இதன் எதி­ரொ­லி­யாக கொழும்பு திரு­கோ­ண­மலை வாழ் தமிழ் மக்கள் தாக்­கப்­பட்­டனர். திரு­கோ­ண­ம­லையில் ஏரா­ள­மான கடைகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. திரு­கோ­ண­மலை சிவன் ஆல­யத்தின் தேர் எரித்து நாசம் செய்­யப்­பட்­டது. ஆல­யத்தின் அருகில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தந்தை செல்­வாவின் சிலைக்கு குண்டு மழை பொழி­யப்­பட்­டது.

இச் சம்­பவம் நடை­பெ­று­வ­தற்கு சுமார் மூன்று மாதங்­க­ளுக்கு முன் (20.04. 1983) கிளி­வெட்­டியைச் சேர்ந்த கதிர்­கா­மத்­தம்பி நவ­ரத்­தி­ன­ராசா என்­பவர் கிளி­வெட்­டி­யி­லி­ருந்து கைது செய்­யப்­பட்டு குரு­நகர் முகாமில் வைத்து சித்­தி­ர­வ­தைக்கு ஆளாக்­கப்­பட்டு கொல்­லப்­பட்டார். இந்த தொடக்­கத்­தினைத் தொடர்ந்து திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் பல்­வேறு சம்­ப­வங்கள் நடந்­தே­றின. வடக்கு கிழக்கு மாகா­ணத்தில் ஆகக் கூடு­த­லான உயிர்­களை முதல் முதல் பறி­கொ­டுத்த கிரா­ம­மாக மூதூர் கிளி­வெட்டிக் கிராமம் என்­பதை அப்­போ­தைய புள்ளி விபரப் பதி­வுகள் எடுத்துக் காட்­டு­கின்­றன.

1986 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி கிளி­வெட்டிக் கிரா­மத்தை அண்­டி­யுள்ள கிரா­ம­மான தெஹி­வத்தை கிரா­மத்­தி­லி­ருந்து இரண்டு இளை­ஞர்கள் மோட்டார் சைக்­கிளில் கிளி­வெட்டிக் கிரா­மத்­துக்கு வந்த வேளை இவர்­களும் இவர்­க­ளுடன் வந்த இன்னும் சிலரும் தாக்­கப்­பட்­டதன் எதி­ரொ­லி­யாக இரு பெண்கள் உட்­பட 36 பேர் கிளி­வெட்டிக் கிரா­மத்தைச் சேர்ந்­த­வர்கள் பதை­ப­தைக்கக் கொல்­லப்­பட்­டார்கள்.

இதன் அடுத்த கட்ட திரை அரங்­கேற்ற காட்­சி­யாக 1986 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி மல்­லி­கைத்­தீவு பார­தி­புரம் பெரிய வெளி­ம­ணற்­சேனை மேன்­காமம் ஆகிய கிரா­மங்­களைச் சேர்ந்த 44 பேர் சுட்டுக் கொல்­லப்­பட்­டார்கள். அன்­றைய தினம் காலை (16.7.1986) மல்­லி­கை­த்தீவு சந்­தியில் கண்ணி வெடியில் இரா­ணுவம் கொல்­லப்­பட்­டதை பழி தீர்க்கும் முக­மாக பெரி­ய­வெளி பாட­சா­லையில் முகா­மிட்டு தங்­கி­யி­ருந்த அப்­பாவி பொது­மக்கள் 44 பேர் கொல்­லப்­பட்­டனர்.
இதில் இரு குழந்­தைகள் கூட துப்­பாக்கி ரவைக்குப் பலி­யா­கி­னர்.

பால்­மணம் மாறாத சிறு­மிக்கு முன்னால் அவ­ளின்தாய் உட்­பட்ட இரு பெண்கள் பாலியல் வன்­மத்­துக்கு ஆளாக்­கப்­பட்டு 7 ஆண்­களும் இரு பெண்­களும் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உப்­பு­வெளிச் சந்­தியில் நடை­பெற்­றது. திரு­கோ­ண­மலை நக­ரத்­தி­லி­ருந்து நிலா­வெ­ளிக்கு செல்லும் பிர­தான பாதையை இணைக்கும் 3 ஆம் கட்டைச் சந்­தியில் அந்தப் பயங்­கரப் படு­கொலை நடந்­தது.

குறித்த அன்­றைய தினம் 11 பேர் கைது செய்­யப்­பட்டு 3 ஆம் கட்டை சந்­தி­யி­லுள்ள ஆட்கள் இல்­லாத வீட்டில் அடைத்து வைக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­துடன் அங்­குள்ள மல­ச­ல­கூட புதை­கு­ழி­களில் முகம் தெரி­யாத வண்ணம் அசிட் ஊற்றி புதைக்­கப்­பட்­டி­ருந்­தனர். பத்து பேர் படு­கொலை செய்­யப்­பட்ட போதும் ஒரு­வரின் உடல் அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை.

1985 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி குச்­ச­வெளி பிர­தேச பிரி­வுக்கு உட்­பட பொலிஸ் நிலையம் தாக்­கப்­பட்­டதன் எதிர்­வி­ளை­வாக திரியாய் கிரா­மத்தில் குடி­யி­ருந்த தமிழ் மக்­களின் 1500 க்கும் மேற்­பட்ட வீடுகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. (05.06.1985) இக்­கொ­டூ­ரத்தின் கார­ண­மாக அக­திகள் ஆக்­கப்­பட்ட சுமார் 3000 க்கும் மேற்­பட்ட திரி­யாய்க்­கி­ராம மக்கள் திரியாய் மகா வித்­தி­யா­ல­யத்தில் அமைக்­கப்­பட்ட மூன்று முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

10.8.1985 ஆம் நாள் முகா­மி­லி­ருந்த 8 பேர் பஸ் ஒன்றில் ஏற்­றிச்­செல்­லப்­பட்டு திரியாய் கிரா­மத்­தி­லி­ருந்து ஹோம­ரங்­க­ட­வல என்னும் கிரா­மத்­துக்கு செல்லும் இடைக்­கி­ரா­ம­மான கல்­லம்­பத்தை என்ற கிரா­மத்தில் வைத்து கொல்­லப்­பட்­டுள்­ளனர். அன்­றைய தினம் காலை­யி­லேயே கல்­லம்­பத்தை கிராமவாசி­க­ளான நான்கு பேர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருந்­தார்கள். இது திரியாய் படு­கொ­லை­யென பதிவு செய்­யப்­பட்­டது.

2000 ஆம் ஆண்­டுக்குப் பின் போர் உக்­கி­ர­ம­டைந்த நிலையில் திரு­கோ­ண­ம­லையில் மனித உரிமை மீறல்கள் உக்­கிரம் பெற்­றுக்­கா­ணப்­பட்­டது என்­ப­தற்கு இக் காலத்தில் நடை­பெற்ற படு­கொ­லைகள் காணாமல் போனோர் கடத்­தப்­பட்டோர் என்ற பட்­டி­யல்கள் நீண்டு கொண்டே போகின்­றது. 2006 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 2 ஆம் திகதி நடை­பெற்ற மாணவர் படு­கொலைச் சம்­ப­வ­மா­னது திரு­கோ­ண­ம­லையை மாத்­தி­ர­மன்றி உல­கத்­தையே கதி­க­லங்க வைத்த சம்­ப­வ­மாக இருந்­தது.
2006.01.2 ஆம் திகதி திரு­கோ­ண­மலை கடற்கரையில் வைத்து 5 மாண­வர்கள் துப்­பாக்­கி­தா­ரி­களால் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

தங்­கத்­துரை சிவா­னந்தா, ச. சஜேந்­திரன், மனோ­கரன் ரஜீகர், லோ. ரொகாந்த், போ. ஹேமச்­சந்­திரன் ஆகிய ஐவர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். இவர்­களின் கொலையின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்­பதைக் கண்­டு­பி­டித்து குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்த எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­பட வில்லை.

இந்த படு­கொலை உட்­பட்ட ஏனைய மோச­மான மனித உரிமை மீறல் குறித்து விசா­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் அறிக்கை கூட வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்­லை­யென தமிழ்த் தேசியக் கட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­மலை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய இரா. சம்­பந்தன் 2013 பெப்­ர­வரி 27 ஆம் திகதி பிரிட்டிஷ் பாரா­ளு­மன்­றத்தின் குழு அறை 14ல் உரை­யாற்­றிய போது எடுத்துக் காட்­டி­யி­ருந்தார்.

இது போல் முன்னாள் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளையின் எச்­ச­ரிக்­கையைத் தொடர்ந்துஅதி­ர­டிப்­ப­டையைச் சேர்ந்த 12 பேர் கைது செய்­யப்­பட்டு திரு­கோ­ண­மலை நீதி­மன்றில் (2013 ஆம் ஆண்டு) ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். ஏழு வரு­டங்­க­ளுக்­குப்­பின்னே இவர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இந்த மாண­வர்­களின் படு­கொ­லையின் பின்­ன­ணி­யாளர் யார் என்­பது உல­க­றிந்த விட­ய­மாகும்.

இதே­யாண்டு (2006 ) இன்­னு­மொரு கோர­மான மனித உரிமை மீறல் சம்­பவம் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் நடை­பெற்­றது. அது தான் தொண்டர் நிறு­வனப் பணி­யா­ளரின் படு­கொ­லை­யாகும். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிரான்ஸ் தேசத்தின் தொண்டர் நிறு­வ­ன­மான அக் ஷன் பாம் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்­றிய 17 தொண்­டர்கள் மூதூரில் வைத்து கொல்­லப்­பட்­டார்கள். நான்கு பெண்­களும் 13 ஆண்­களும் பலி­யாக்­கப்­பட்­டார்கள்.

மாவி­லாறு யுத்தம் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்து வாழ்ந்த மக்­க­ளுக்கு தொண்­டாற்ற வந்த மேற்­படி தொண்­டர்­களே அலு­வ­ல­கத்­துக்கு வெளியே கொண்­டு­வ­ரப்­பட்டு குப்­புற படுக்க வைத்து பின்­பக்­க­மாக தலையில் சுடப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டார்கள். 2006 ஆம் ஆண்டு ஒரு அபத்­த­மான ஆண்டு என வர்­ணிக்­கப்­ப­டு­கிற அள­வுக்கு இன்னும் பல சம்­ப­வங்கள் திரு­கோ­ண­ம­லையில் நடந்­ததை பல்­வேறு சம்­ப­வங்கள் நினை­வு­ப­டுத்­து­கின்­றன.

கிண்­ணியா பிர­தேச செய­லாளர் பிரி­வுக்கு உட்­பட்ட ஆலங்­கே­ணி­யென்னும் தமிழ்க் கிரா­மத்தைச் சேர்ந்த இரண்டு பிள்­ளை­களின் தாயான காந்தன் சித்­திரா (40 ) குடும்பப் பெண் 2.7.2006 ஆம் ஆண்டு இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் சுட்டுக் கொல்­லப்­பட்டார். இச்­சம்­பவம் நடை­பெற்ற மறுநாள் 3.7.2006 இல் அனு­ரா­த­புர சந்­தியில் வீதிச்­சோ­த­னையில் ஈடு­பட்­டி­ருந்த கிளைமோர் தாக்­கு­தலில் ஆறு படையினர் கொல்­லப்­பட்­டனர்.

14 பேர் படு­காயம் அடைந்­தனர். 07.07.2006 கணேஷ் லேனில் முஸ்லிம் மீன­வரும் 23.05. 2006 கன­க­சபை சந்­திரன் என்ற மீன்­வி­யா­பாரியும் கட்­டைப்­ப­றிச்சான் சோதனைச் சாவ­டி­யிலும் 23.07.2006 இல் ஈச்­சி­லம்­பற்று பூநகர் கிரா­மத்தைச் சேர்ந்த நாக­ராஜா சுந்­த­ர­லிங்கம் (24) 20.08. 2006 ஆம் திகதி சொர்ணம் என்­ப­வரின் சகோ­தரர் மக்­ஹேய்சர் ஸ்ரேடி­யத்­துக்கு அருகில் 14.09.2006 இல் அரச ஊழியர் ஒருவர் 2006.11.07இல் மூன்று இளை­ஞர்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­டமை மற்றும் செல்­வ­நா­ய­க­புரம் கொலை, ஆத்­தி­மோட்டைக் கொலை­யென இவ்­வாண்டில் பல்­வேறு அசம்­பா­வி­தங்கள் நடந்­தி­ருந்­தன.

இவற்­றுக்கு மேலாக உவர்­மலை லோவர் வீதியில் வைத்து சுட­ரொளிப் பத்­தி­ரி­கையின் திரு­கோ­ண­மலை நிருபர் எஸ். சுகிர்­த­ராஜன் (வயது 35) ஆயு­த­தா­ரி­களால் (24.01.2006) சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

2007 ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லையின் இத்­த­கைய போக்­குகள் இன்னும் மலிந்து காணப்­பட்­டன. 2007.01.26 ஆம் திகதி கிண்­ணியா நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் ஆலங்­கே­ணியைச் சேர்ந்த தங்­க­ராஜா இத­ய­ராஜா (வயது 39) ஆயுத தாரி­களால் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். 5.1.2007 இல் கிளேமோர் தாக்­குதல் கார­ண­மாக காய­ம­டைந்­ததன் எதிர்த்­தாக்­க­மாக உப்­பு­வெளிப் பிர­தே­சத்தில் ஜெய­ராசா ஜெய­தீபன் அச்­சுதன் சசி­தரன் செல்­வ­நா­ய­க­புரம் நிரோசன் பற்றிக் ஆகியோர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார்கள்.

இவ்­வாறு 1983 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து 2009 ஆம் ஆண்டு காலம்­வரை திரு­கோ­ண­மலைப் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்­க­ளா­னது அப்­பாவி பொது மக்­களை பலி கொள்ள வைத்­த­துடன் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் அமைதிச் சம­நி­லை­யையும் இனச்­ச­ம­நி­லை­யையும் பாதித்த சம்­ப­வங்­க­ளாகக் காணப்­ப­டு­கி­றது.

இவை ஒரு புற­மி­ருக்க இம்­மா­வட்­டத்தில் வித­வைகள் ஆக்­கப்­பட்டோர், காணாமல் போனோர், கடத்­தப்­பட்டோர் இடம்­பெ­யர்ந்தோர் என்ற விவ­கா­ரங்கள் மனித உரிமை மீறல்­களை உச்ச நிலைக்கு உயர்த்திக் காட்­டு­வ­துடன் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நியாயம் அல்­லது தீர்வு காணப்­ப­டாத விட­ய­மா­கவே பேசப்­ப­டு­கி­றது.

முதலில் வித­வைகள் என்ற பிரச்­சி­னை­களை நோக்­கு­வோ­மாயின் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 21 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட வித­வைகள் ஜீவ­னோ­பா­ய­மற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்­டி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மாத்­திரம் போரினால் பாதிக்­கப்­பட்ட 10 ஆயிரம் வித­வைகள் இருப்­ப­தாக உத்­தி­யோ­கப்­பற்­றற்ற புள்ளி விப­ரங்கள் எடுத்துக் காட்­டு­கின்­றன.

இவர்­களின் நலனை நோக்­க­மாகக் கொண்டு மாவட்­டத்தில் 26 வித­வைகள் சங்கம் இயங்கி வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. மூதூரில் மாத்­திரம் சுமார் 5 ஆயி­ரத்து 500 க்கும் மேற்­பட்ட வித­வைகள் போரினால் கண­வன்­மாரை இழந்­த­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர்.

சம்பூர் மூதூர் பாலத்­த­டிச்­சேனை கூனித்­தீவு, கடற்­கரைச் சேனை, சேனையூர், பச்­சைநூல் கிளி­வெட்டி, கங்­கு­வேலி, மேன்­காமம் ஈச்­சி­லம்­பற்று வெருகல் இலங்கைத் துறை­முகம் போன்ற கிரா­மங்­களில் இந்த வித­வைகள் பர­வ­லாக வாழ்ந்து வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. அண்­மைக்­கா­லத்தில் வெளி­யி­டப்­பட்ட சில அறிக்­கைகள் தக­வல்­களின் அடிப்­ப­டையில் பார்க்­கின்ற போது சட்ட ரீதி­யாக பொது­மக்கள் கொடுத்­துள்ள மனுக்­களின் அடிப்­ப­டையில் 20 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்டோர் காணாமல் போயி­ருக்­கின்­றார்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஆனால் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் எத்­தனை ஆயிரம் பேர் காணாமல் போயுள்­ளார்கள் என்ற முறை­யான கணக்­கெ­டுப்பு இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்­லை­யென்றே கூற வேண்டும்.

இருந்த போதிலும் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் கணக்­கெ­டுப்­புக்கள் பூர­ண­மாக்­கப்­ப­ட­வில்­லை­யென்ற வதந்­தி­களும் கூறப்­ப­டு­கின்­றன. ஒரு சில ஆய்வு மையங்கள் மேற்­கொண்ட தக­வ­லின்­படி திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் சுமார் 3, 200 பேர் கடத்­தப்­பட்டும் காணா­மலும் போயுள்­ளனர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தடியில் காணாமல் போ னோரை தேடியறியும் அமைப்பின் ஏற்பாட் டில் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு போராட் டத் தில் தாய்மார் மனைவிமார் சகோதரர் உறவி னர் என்ற வகையில் பலநூறு பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கலந்து கொண்ட தாயொருத்தி 23 வருடங்களாக என் பிள்ளையைத் தேடுகிறேன் என்றும் ஒரு மூதா ட்டி தனது 3 பிள்ளைகள் கடத்தப்பட்டு காணா மல் போயுள்ளனர் என்றும் இன்னுமொரு தாய் தனது மகளின் படத்தை ஏந்திய வண்ணம் 2008 ஆம் ஆண்டு நேர்முகப் பரீட்சைக்கு சென்ற எனது மகளை இதுவரை காணவில்லை என வும் கதறியழுத காட்சிகளைக் காண முடிந்தது.

கடந்த 3.2.2015 ஆம் திகதி கடத்தப் பட்டோர் காணாமல் போனோரை கண்டுபிடி த்து தரும்படி கோரி கவனயீர்ப்புப் போராட்ட மொன்று திருகோணமலை ஆளுநர் அலுவல கத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது. இதை நாங்கள் அமைப்பு மற்றும் கடத்தப்பட்டோர் காணாமல் போனோர் உறவுகளின் அமைப்பு மாவட்ட பெண்கள் சமாஜம் அமரா அமைப்பு என்பன இணைந்து நடத்தியிருந்தன.

ஏலவே பதியப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட கடத்தப் பட்டோர் காணாமல் போனோர் விபரங்களும் புதிய தகவல்களும் சேர்க்கப்பட்டிருந்தன.

இவ் வகைத் தகவல்கள் எல்லாம் முறையான வகை யில் கோவைப்படுத்தப்பட்டு தரவு மயப்படுத் தப்பட வேண்டும். காணாமல் போய் உள்ளவர்கள் பற்றிய விசா ரணைகளை நடத்தி வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழு விரைவில் தனது அடுத்த அமர்வை திருகோணமலையில் நடத்தவுள்ளது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் சுரேஷ் பிரே மச்சந்திரனால் தெரிவிக்கப்பட்ட கோத்தா முகாம் தொடக்கம் காணாமல் போனோர் கடத்தப்பட்டோர் படுகொலை செய்யப்பட் டோர் மறைமுக முகாம்களில் தடுத்து வைக் கப்பட்டோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வர அரசியல் தலைமைக ளும் சமூக அமைப்புக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

SHARE