திருகோணமலையில் பெயர் தெரியாத சிறிய தீவு சோர்பர் தீவு

577

 

இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் யாழ்ப்பாணத்திற்கு 113 கிலோமீற்றர்கள் தெற்கிலும் மட்டக்களப்பிற்கு 69 கிலோமீற்றர்கள் வடக்கிலும் அமைந்துள்ள திருகோணமலை இலங்கைத் திருநாட்டின் இயற்கை வனப்புக்கும் எழில்மிகு தோற்றத்துக்கும் சான்றாக விளங்கும் ஓர் நகராகும்.
 அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களைத் தனது எல்லையாகக்கொண்ட திருகோணமலையின் இயற்கையாக அமைந்த கடற்கரை அழகு உள்நாட்டவர் முதல் வெளிநாட்டவர் வரை திருகோணமலையைத் தங்கள் நினைவுகளில் நீங்கா இடம்பெற்று நிற்கச் செய்கின்றது. இருப்பினும், இவையனைத்தையும் தாண்டி, திருகோணமலையானது மிகத் தொன்மையான வரலாற்றுக் கதைகளையும் தனது சுற்றுலாத்தளங்களுக்குள் உள்ளடக்கி நிற்கிறது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகவும் திருகோணமலை விளங்கி நிற்கின்றது.
வரலாற்றுடன் கலந்த சுற்றுலாப்பிரதேசங்களை அனுபவிக்கின்ற எவருக்குமே திருகோணமலை ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத்தளமாகவிளங்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கையின் சுற்றுலாத்துறை சம்மேளனத்தின் வருடாந்த அறிக்கைக்கமைவாக, 2015 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளில் 74.1% சதவீதமானவர்கள் இலங்கையின் கிழக்குக்கடற்கரைப் பகுதிகளுக்குப் பயணம் செய்துள்ளார்கள் என்பதே அதனை நிரூபிக்கப் போதிய சான்றாக உள்ளது.
 திருகோணமலையில் மிளகு ஜெட்டியை விட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து சோபர் தீவு அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ள 175 ஏக்கர் தீவு, “Isle du Solite” என்ற வார்த்தையின் பிரெஞ்சு அர்த்தத்தில் “சூரியனின் தீவு” என்று மறுபெயரிடப்பட்டது மற்றும் 1919 மற்றும் 1922 இல் இரண்டு தளங்களின்படி இலங்கை கடற்படையால் உருவாக்கப்பட்டது.
SHARE