திருகோணமலையில் பெருங்குற்றங்களில் ஈடுபட்ட மூவர் கைது

281
13 பெருங்குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் எனும் சந்தேகத்தின்பேரில் திருகோணமலை பொலிஸ் தலைமைக் காரியாலய பெருங்குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்றையதினம் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு வேளைகளில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், கொள்ளையிடுவதற்கு உபயோகித்த உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உற்பட ரூபா 500,000 பெறுமதியான பல இலத்திரனியல் பொருட்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் திருகோணமலை பொலிஸ் தலைமைக் காரியாலய பெருங்குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நிலான் தர்ஷன மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் யோகேஸ்வரன் அருனன் அடங்கிய குளுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து iகைப்பற்றப்பட்ட பொருட்கள் இன்று நீதிமண்றில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

SHARE