திருகோணமலையில் வாக்கு எண்ணும் நிலையங்களில் மாற்றம்.

144
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது திருகோணமலை மாவட்டத்தில் வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
ballot-box-070115-seithy (1)

இதன்படி இம்முறை வாக்கெண்ணும் நடவடிக்கை திருகோணமலை தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னர் வாக்கெண்ணும் பணிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் திருமலை வித்தியாலம் ஆகிய இடங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இம்முறை குறித்த இரு இடங்களையும் வாக்கெண்ணும் பணிகளுக்காக பயன்படுத்த போவதில்லை என மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

 

SHARE