EWS ARTICLES
திருகோணமலை படுகொலைச் சம்பவங்கள் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் இவ்வாறு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவனமான ஏ.சீ.எப் இன் 17 தன்னார்வ தொண்டர்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும் ஐநு;து பாடசாலை மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை குறித்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளன.
சம்பவ இடத்திலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பல்வேறு வழிகளில் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.