திருப்பி அடித்த மேக்ஸ்வெல்: இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி

73

 

இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ்
இந்தியா- அவுஸ்திரேலியா இடையே 3வது டி20 போட்டி குவஹாத்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சி வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வை செய்தது.

தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அசத்தி வந்த நிலையில், கிட்டத்தட்ட 57 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் கெய்க்வாட் 13 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் விளாசி மொத்தம் 123 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

அவரை தொடர்ந்து கேப்டன் சூர்ய குமார் யாதவ் 36 ஓட்டங்களும், திலக் வர்மா 31 ஓட்டங்களும் குவித்து அசத்தினார்கள்.

முதல் பேட்டிங்கின் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ஓட்டங்கள் குவித்து அசத்தியது.

வெற்றியை தட்டி தூக்கிய மேக்ஸ்வெல்
இதையடுத்து மிகப்பெரிய இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 35 ஓட்டங்களுடனும், ஆரோன் ஹார்டி 16 ஓட்டங்களுடன் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

ஆனால் பின்னர் வந்த கிளென் மேக்ஸ்வெல் இந்திய அணியின் பந்துகளை நாலாப்புறமும் சிதறடித்தார். 48 பந்துகளை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் 8 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.

கடைசியில் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 225 ஓட்டங்கள் குவித்து இந்த டி20 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

SHARE