இவரா மெல்லிசை மன்னர்? மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். திரைப்பிரபலங்கள் பலரும் MSVக்கு நேரில் அஞ்சலி.

151

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மெல்லிசை மன்னர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார்.

தற்போது இவருடைய உடல் சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதனுடைய இழப்பு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியத் திரையுலகிற்கே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

87 வயதான இவர் இதுவரை 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். காதல் மன்னன், காதலா காதலா உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இசையுலகின் உச்சக்கட்ட துயரம் இன்றாக தான் இருக்கும்,

msv_funeral001

இவருடைய உடலை சென்னையில் உள்ள அவர் வீட்டிலேயே வைத்துள்ளனர். திரையுலகம் மற்றும் அரசியல் துறையை சார்ந்த பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

தற்போது வரை சிவக்குமார், ஏ.வி.எம்.சரவணன், Y.G.மகேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழீழ அகதிகள் தொடர்பான ……. விடைகொடு எங்கள் நாடே என  சோகப்பாடலைப் பாடி….. ஈழ மக்களை உருகவைத்த….. தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மெல்லிசை மன்னர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 4.15 மணிக்கு காலமானார்.


தற்போது இவருடைய உடல் சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதனுடைய இழப்பு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியத் திரையுலகிற்கே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

87 வயதான இவர் இதுவரை 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். காதல் மன்னன், காதலா காதலா உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதோடு பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவராவார்..

viswanathan

படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : M.S.விஸ்வநாதன், பல்ராம், மாணிக்க வினாயகம்,
பாடல் வரி : வைரமுத்து

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா? வருமா?
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?

கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?

பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

SHARE