திரையுலகில் த்ரிஷா மார்க்கெட்டை இழக்கக் காரணம்-அனுஷ்கா…

395

திரையுலகில் அறிமுகமாகி கடந்த வருடத்திற்கும் மேலாக இன்னமும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர் த்ரிஷா. சில வருடங்கள் முன்னர் வரை தமிழிலும், தெலுங்கிலும் நம்பர் 1 நடிகையாக இருந்தார். அதன் பின் பல புதிய நடிகைகள் வந்ததால் தமிழிலும், தெலுங்கிலும் அதிகமான வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். தற்போது தமிழில் குறிப்பிடும்படியாக அஜித்துடன் ஒரு படம், ஜெயம் ரவியுடன் ஒரு படம் என நடித்து வருகிறார். ஜெயம் ரவி ஜோடியாக அவர் நடித்த ‘பூலோகம்’ எப்போது வரும் என்று தெரியாமலே உள்ளது. கன்னடத்தில் அவர் முதன் முதலாக நடித்த ‘பவர்’ திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று அங்கும் அவருக்கு பல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

இதனிடையே, தெலுங்கில் த்ரிஷா மார்க்கெட்டை இழக்கக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் அனுஷ்கா, கன்னடப் பட உலகிலும் மீண்டும் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம். தெலுங்கில் பல கதாநாயகர்கள் நல்ல உயரமானவர்கள் என்பதால் அவர்கள் அனுஷ்காவைப் பொருத்தமான ஜோடியக தேர்ந்தெடுக்க ஆரம்பித்ததே த்ரிஷாவின் பின்னடைவுக்குக் காரணம் என டோலிவுட்டினர் சொல்கிறார்கள். இப்போது கன்னடத்திலும் த்ரிஷாவை பின்னுக்குத் தள்ள அனுஷ்கா முடிவெடுத்து விட்டாரோ என அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்காவும், த்ரிஷாவும்தான் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் முதலில் நடிப்பதற்கு த்ரிஷா தயங்கியிருக்கிறார். சிறிய கதாபாத்திரமாக இருந்த த்ரிஷாவின் கதாபாத்திரத்தை அவரின் வேண்டுகோளுக்கிணங்க கௌதமும் முக்கியத்துவம் வருவது போல் உருவாக்கி விட்டார் என்கிறார்கள். அதனால்தான் கோபமடைந்த அனுஷ்கா, கன்னடத்திலும் அவருக்குப் போட்டியாக வர முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள்.

 

SHARE