திஸ்ஸ அத்தநாயக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்

195

 

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்க இன்று இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன் எடுக்கப்படும் விசாரணை குறித்தே அவரிடம் வாக்கு மூலம் பெற்று கொள்ளப்பட்டுள்ளது.

MR12082014T_4 Tisa_1

இந்தநிலையில், இன்று முற்பகல் 10 மணி அளவில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குச் சென்ற திஸ்ச அத்தநாயக்கவிடம் 5 மணித்தியாலங்கள் விசாரணை முன் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவரது பிணை கோரிய மனு நிராகரித்ததுடன், எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திஸ்ஸ அத்தநாயக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று லஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொண்டமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைத் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்கவே அவர் அங்கு சென்றுள்ளார்.

முற்பகல் 10 மணி அளவில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குச் சென்ற திஸ்ஸ அத்தநாயக்கவிடம் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE