தி கேரளா ஸ்டோரி படத்தை எதிர்ப்பவர்கள்தான் தீவிரவாதிகள்

89

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கணிசமான வசூலை பெற்று வருகிறது. நடந்தது உண்மையா அல்லது கற்பனையா என்பதைத்தாண்டி ஒரு கதையாக இந்தப்படத்தைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

திரையிட்ட இடங்களில் ஓரளவுக்கு வசூலை கொடுத்து வருகிறது. தி கேரளா ஸ்டோரி இந்த நிலையில் படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருபவர்களை கடுமையாக சாடியிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத்.

இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:- இப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தை தடை செய்ய வேண்டும் என பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து ஆதரவு அளித்துள்ளது என்றால் அதை நிச்சயம் ஏற்று கொள்ளத்தானே வேண்டும்.

ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பினரை தவிர வேறு யாரையும் தவறாக சித்தரிக்கவில்லை என நினைக்கிறன். அப்படி அது உங்களை பாதிப்பதாக நினைத்தால் நீங்கள் தான் தீவிரவாதி என்று பேசியிருக்கிறார்.

maalaimalar

 

SHARE