தீராத முதுகுவலி.. இனி என்னால் முடியாது! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த கேப்டன்

11

 

நெதர்லாந்து அணியின் கேப்டன் பீட்டர் சீலார், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் வீரரான பீட்டர் சீலார், கடந்த 4 ஆண்டுகளாக நெதர்லாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முதுகுவலி பிரச்சனை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சீலார் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘2020ஆம் ஆண்டு முதல் எனக்கு இருந்துவந்த முதுகுவலி பிரச்சனைகள், தற்போது மிகவும் மோசமாகிவிட்டன. நான் இதை நினைத்து மிகவும் வருந்துகிறேன். நான் பெற்ற அனைத்தையும் இனி என்னால் கொடுக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.

34 வயதாகும் பீட்டர் சீலார் 75 டி20 போட்டிகளில் 591 ஓட்டங்களும், 58 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதேபோல் 57 ஒருநாள் போட்டிகளில் 347 ஓட்டங்களும், 57 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

SHARE