தெஹிவளை சந்தி, காலி வீதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுக் கார் ஒன்று நேற்று இரவு திடீரென தீப்பற்றியுள்ளது.
அதனையடுத்து காரின் சாரதி உடனடியாக செயற்பட்டு காரை விட்டு வெளியேறியமையால் காயங்கள் இன்றி தப்பித்துக் கொண்டுள்ளார்.
இயந்திரக் கோளாறு
இதனையடுத்து தெஹிவளை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
எனினும் கார் எரிந்து சேதமடைந்துள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாகவே குறித்த கார் தீப்பற்றி இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.