பிரான்சில் உள்நாட்டிலேயே உருவான இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள புதிய நடவடிக்கைகளை பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது.பிரான்சில் தலைநகர் பாரிசில் நடந்த சார்லி ஹெப்டோ பத்திரிகை தாக்குதல் மற்றும் சூப்பர் மார்க்கெட் தாக்குதல் பிரான்ஸ் மட்டுமின்றி உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இனி தாக்குதல்களை ஒழிக்கும் வகையில் பிரான்சின் உள்நாட்டிலே உருவாகும் தீவிரவாதிகளை ஒழிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து பிரதமர் மானுவெல் வேல்ஸ் (Manuel Valls)கூறுகையில், இந்த நடவடிக்கையில், 2,500க்கும் மேற்பட்ட உளவு ஏஜெண்டுகள் ஆட்சேர்க்கப்படுவார்கள். பாதுகாப்புப் படைகளுக்கு மேலும் நல்லமுறையில் ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும், இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட சந்தேக நபர்கள் குறித்த விவரமான தரவுகள் அடங்கிய தகவல் தளம் ஒன்று உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். |