தீவிரவாதிகள் பதுங்கிடங்கள் மீது பாக்.போர் விமானங்கள் குண்டு மழை: 150 பேர் பலி

397
கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களின் மீது நேற்று பின்னிரவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து, அதிரடியாக தாக்குதல் நடத்தின.

வசிரிஸ்தானில் உள்ள டட்டா கெல் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த 6 மறைவிடங்களின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் உஸ்பெக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த பல தீவிரவாதிகள் உள்பட சுமார் 150 பேர் பலியானதாகவும் பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE