துறைமுக பாதுகாப்பு கல்லூரியை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு கொம்பனித்தெருவில் இந்த பாதுகாப்பு கல்லூரி அமைந்துள்ளது.
குறித்த பாதுகாப்பு கல்லூரியின் நிலைமைகள் குறித்து கண்காணிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன் போது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணம் செய்த வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
தாக்குதல் சம்பவத்தினால் கொழும்பு கொம்பனித்தெரு துறைமுக பாதுகாப்பு கல்லூரி பகுதியில் பதற்ற நிலைமை நீடித்து வருகின்றது.
– See more at: http://www.tamilwin.net/show-RUmszARVKWfx7.html#sthash.CBCilOlf.dpuf