தூக்கி எறியப்பட்ட ஸ்ரீரங்கா, பிரபா! தேசிய பட்டியலில் அங்கஜனுக்கு வாய்ப்பு

131

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜிதமுனி சொய்சா, எஸ்.பி. திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமதிபால, அங்கஜன் ராமநாதன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மலித் ஜயதிலக்க, பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 12 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 11 பேர் முன்னாள் அமைச்சர்களாவர்.

ஏற்கனவே தேர்தல் ஆணையாளரிடம் வழங்கப்பட்டிருந்த தேசியப்பட்டிலில் இடம்பெற்றிருந்த ஜே. ஸ்ரீரங்கா, ஜீ.எல். பீரிஸ், டியூ. குணசேகர, திஸ்ஸ விதாரண, திஸ்ஸ அத்தநாயக்க, ரொஜினோல்ட் குரே, ஜீவன் குமாரதுங்க, டிரான் அலஸ், பிரபா கணேசன், பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, பிரியசிறி விஜேநாயக்க, ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும் பேராசிரியர் மொஹமட் ஹூசைன் ரிஸ்மி செரீப், ஷிரால் லக்திலக்க, பேராசிரியர் கொல்வின் குணரத்ன, பேராசிரியர் கபில குணசேகர, கலாநிதி பீ.ஏ. ரத்னபால, கருப்பையா கணேசமூர்த்தி, லெஸ்லி தேவேந்திர, சோமவீர சந்திரசிறி, எம்.எஸ். உதுமா லெப்பை, ஜயந்த வீரசிங்க, எம்.எப்.எம். முஸ்ஸாமில், கெவிந்து குமாரதுங்க ஆகியோரது பெயர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பட்டியலில் ஏ.எச்.எம். பௌசி, சரத் அமுனுகம, பைஸர் முஸ்தபா ஆகியோர் இடம்பெற்றிருந்ததுடன் அவர்கள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

SHARE