தென்கொரியாவில் பஸ்நிலையத்தில் தீ விபத்து: 7 பேர் பலி

476

தென்கொரியாவின் வடக்கு பகுதியில் கோயாங் நகரம் உள்ளது. அங்குள்ள பஸ்நிலையத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. தீ ‘மளமள’வென பரவியது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது அங்குள்ள கழிவறையில் 7 பேர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இந்த விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே சாவு எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. பஸ்நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணியின்போது வெல்டிங் வேலை நடந்தது. இதில் இருந்து வெளியேறிய தீப்பொறி விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

SHARE