தெற்கு எகிப்தில் பாலைவன நெடுஞ்சாலையில் ட்ரக் மீது மினிபஸ் மோதியதில் 17 பேர் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எகிப்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோஹாக் மாகாணம் ஜுஹைனா மாவட்டத்தில் இருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அங்குள்ள ஒரு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் தறிக்கெட்டு ஓடிய பேருந்து எதிர்திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் பேருந்து அப்பளம்போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த மாதம் 20-ம் திகதி எகிப்தின் மினாயா மாகாணத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியானதும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.