தெல்லிப்பழை பகுதியில் சட்ட விரோதமாக ட்ரோன் கமரா பறக்கவிட்ட நபர் கைது

47

 

தெல்லிப்பழை பகுதியில் முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று முன் தினம் (10.02.2024) இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை
இதன்போது தெல்லிப்பழை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு தெல்லிப்பழை பொலிஸாரால் ட்ரோனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE