தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பு வடகிழக்கில் 17ஆசனங்களைக் கைப்பற்றியது

234

இலங்கையின் 15வது நாடாளுமன்றத்தேர்தல் கடந்த 17.08.2015 அன்று நடைபெற்றுமுடிந்துள்ள இந்நிலையில் வடகிழக்கில் இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் 17 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளமை மீண்டும் தமிழ் மக்கள் தேசியத்தலைவரின் ஆணைக்கு மதிப்பளித்துள்ளார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஒற்று மையை சீர்குலைப்பதற்காக வடபிராந்தியத்தில் மாத்திரம் 28 சுயேட்சைக்குழுக்கள், கிழக்கில் 32 சுயேட்சைக்குழுக்கள் என இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் களமிறக்கப்பட்டன. இதில் குறிப்பாகக் கூறவேண்டிய விடயம் என்னவென்றால் விடுதலைப்புலிகளின் முன்னாள் போரா ளிகள் எனக்கூறிக்கொண்டு வித்தியாதரன் தலைமையிலான ஒரு கட்சியும், அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் போன்ற கட்சிகள் தாம் தேசியத்தலைவரின் வழி யில் செல்கின்றோம் எனக்கூறிக்கொண்டு பாராளுமன்றத்தேர்தலில் களமிறங்கின. இறுதியில் இவர்களின் நிலைமையை யாவ ரும் அறிந்ததே.
இலங்கை அரசின் முக்கிய குறிக்கோள் என்னவென்றால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைப்பது மட்டுமல்லாது பாராளுமன்றத்தில் இவர்களின் பிரதிநிதி களைக் குறைப்பதன் ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏகபிரதிநிதிகள் இவர்கள் தான் என்பதை சர்வதேசத்திற்கு மறைக்க இதுவொரு வாய்ப்பாக அமைந்திருக்கும் என்பதேயாகும். தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவும்பொழுது எதிர்க்கட்சியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கே இருக்கின்றது.
அதன் பிரகாரம் பார்க்கின்ற பொழுது கூட்டரசாங்கம் அமையும் பொழுது எதிர்க்கட்சியாக பாராளுமன்றில் த.தே.கூட்டமைப்பே அங்கம் வகிக்கும். இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும். பிரபாகரனுடைய சிந்தனையிலும், நெறிப்படுத்தலிலும் உருவான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களிடத்தில் பலத்த ஆதரவுடன் இருக்கின்றது. நாம்தான் விடுதலைப்புலிகள் சார்பில் போட்டியிடுகின்றோம் என போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டாலும் இவர்கள் யார் என்பதை மக்கள் இனங்கண்டுகொள்வார்கள். மண் மீட்கும் போராட்டத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கானப் போராளிகள் என உயிர்த்தியாகம் செய்துள்ளார்கள். இத்தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஜனநாயக விடுதலைப்புலிகளின் போராளிகள் கட்சி என்பன இம்முறைத் தேர்தலில் களமிறங்கி தோல்வியைத் தழுவியுள்ளன.
தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடர்பான ஆதாரங்களை இல்லாதொழிப்பதற்கே விடுதலைப்புலிகளின் போலி முகவர்கள் பலர் அறிமுகப்படுத்தப்பட்டனர். இறுதி யில் இவர்களின் நிலை என்ன? இன்றும் கூட தமிழ் மக்கள் பிரபாகரனுடைய போராட்டத்திற்கு தமது முழுமையான அங்கீகாரத்தினை வழங்கியுள்ளார்கள் என்பதையே இலங்கையின் 15வது நாடாளுமன்றத்தேர்தல் எடுத்துக்காட்டுகிறது. அதன்பிரகாரம் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களின் விபரங்களைப்பார்க்கின்றபொழுது,

ddddd

யாழ் மாவட்டம்
1. சிவஞானம் சிறிதரன் – 72058
2. மாவை சேனாதிராஜா – 58732
3. எம்.ஏ.சுமந்திரன் – 58043
4. த.சித்தார்த்தன் – 53743
5. ஈ.சரவணபவன் – 43223

வன்னி மாவட்டம்
6. சார்ள்ஸ் நிர்மலநாதன் – 34620
7. செல்வம் அடைக்கலநாதன் – 26397
8. சிவசக்தி ஆனந்தன் – 25027
9. வைத்தியகலாநிதி சிவமோகன் – 18412

மட்டக்களப்பு மாவட்டம்
10. ஞா.சிறிநேசன் – 48221
11. எஸ்.எஸ்.அமல் – 39321
12. சீ.யோகேஸ்வரன் – 34039
அம்பாறை மாவட்டம்
13. ரொபின் – 17,779

திருகோணமலை மாவட்டம்
14. இரா.சம்பந்தன் – 33834
என்ற ரீதியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வெற்றி அமையப் பெற்றிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் யுத்தம் மௌனிக்கப்பட்ட நிலையிலும் த.தே.கூட்டமைப்பு தொடர்ந்தும் தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரபாகரனால் திட்டமிட்டு பாராளுமன்றிற்கு அனுப்பப்பட்டவர்களே இவர்கள். எனி னும் இதில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளில் உள்ளவர்களும் அங்கம் வகிக்கின்றனர். இவர்களுடைய முந்தைய காலம் மக்கள் மத்தியில் வெறுப்பினை தோற்றுவித்தாலும் வரும் சந்ததியினர் இவ்வாறான மனோபாவத்தில் இவர்களை பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் அற்ற நிலையே உருவாகும்.
கடந்த காலங்களில் இவ் வியக்கங்களுடைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கசப்பானவைகளாக தோற்றம் பெற்றாலும் புதிய தலைவர்களை உருவாக்குவதில் தமிழ் மக்கள் முன்னின்று செயற்பட்டனர். ஜன நாயகப் போராளிகள், அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் போன்ற ஏனைய தமிழ்க்கட்சிகளாக இருந்தாலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து எதிர்வரும் காலங்களில் ஆசனங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். தேசியத்தலைவர் பிரபா கரனின் காலத்தில் 22 ஆசனங்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் பாராளு மன்றத்தில் பெற்றிருந்தார்கள். அதன்படி தற்போது இவர்கள் இன்னும் 06 ஆசனங்களை மேலதிகமாகப் பெறவேண்டிய நிலை இருக்கின்றது. அதனைப் பெற்றுக்கொள்ள ஏன் இந்தத்; தமிழ்க்கட்சிகள் முயற்சிக்கவில்லை? யாழில் 02, வன்னித்தொகுதியில் 02, கிழக்கில் 02 என ஆசனங்களை இழக்கநேரிட்டுள்ளது. இந்நிலைமை ஏன் வரவேண்டும். இதர தமிழ்க்கட்சிகள் இதனைச் சிந்திக்கவேண்டும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் குறைகளையே பேசிக்கொண்டிருக்காமல் அனைத்துத் தரப்பினரும் இணைந்து பேச்சுக் களில் ஈடுபடுவதே சிறந்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பலவீனங் களை அரசிற்குக் காட்டிக்கொடுப்பதன் ஊடாக இவர்கள் எதனைச் சாதிக்கப்போகிறார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய தேசியத்தலைவரின் போராட்டத்தைக்கண்டு உலக நாடுகளே வியந்தன. குறிப்பாக வல்லரசு நாடுகள் பிரபாகரனின் போராட்டத்தை சிதைக்கவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டின. சிங்கள இராணுவம் தமிழ் மக்களுக்கெதிராகத் தனியாகப் போராடியிருந்தால் வெற்றியினைப் பெற்றிருக்கமாட்டார்கள்.

இன்று அஹிம்சை ரீதியிலான போராட்டம் தொடர்வதற்காகவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. சம்பந் தனுடைய தலைமை என்பது சாதாரண மானதொன்றல்ல. ஜனநாயகப் போரா ளிகள் கட்சி ஏற்கனவே தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் சம்பந்தன் அவர்களை சந்தித்துப்பேசியபொழுது, ”உங்களைப் புலனாய்வாளர்கள் என மக்கள் கூறுகிறார்கள். இதனை நாம் சிந்தித்தே தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும்’ என நேரடியா கவே அவர்களுக்குப் பதில் வழங்கினார். அரசியல் களத்தில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர் அவர். சர்வதேச மட்டத்திலான பேச்சுக்கள் எனும்பொழுது அவர்கள் கூட்டமைப்புடனே சந்திப்புக்களை மேற்கொள்கின்றார்களே தவிர, சிறு குழுக்களுடன் அல்ல. தேசியத்தலைவரோடு புகைப்படம் ஒன்றினை மாத்திரம் எடுத்துக்கொண்டால் தேசியத்தலைவரின் நம்பிக்கைக்குரிய பாத்திரம் என்று அர்த்தமல்ல.

விடுதலைப்புலிகளுடைய செயற்பாடுகள் தொடர்ந்தும் இலங்கையில் இடம்பெறுமாகவிருந்தால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் எதிர்வரும் காலங்களில் 22 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக் கள் இருக்கின்றது. அதில் மாற்றுக்கருத்தில்லை. இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கப் பட்ட நிலையில் இவர்களது திட்டங்களை முறியடித்து மீண்டும் எமக்கான உரிமைப்போராட்டத்தை முன்னகர்த்தவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும், விடுதலைப்புலிகளின் உயர்மட்டக் குழுக்களுக்கும் இருக்கிறது.

எனினும் இன்று எமது அரசியல் நடவடிக்கைகளை மெதுவாக நகர்த்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகப்போராளிகள் எனக்கூறிக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை இத்தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது. தலைவர் பிரபாகரனைப்போல இன்னொரு தலைவர் உருவாக முடியாது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஒரு சிலர் த.தே.கூட்டமைப்பிற்கு எதிராக பரப்புரைகளை மேற்கொண்டு வருவதுடன் தாம் ஏதோ சாதித்துவிட்டோம் என நினைக்கிறார்கள். அவ்வாறெனில் இம்முறை தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலர் பெற்றிபெற சிலர் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர். இவர்களுக்கான ஆணையை தமிழ் மக்கள் வழங்கவில்லை. இதனைவிடவும் ருNP மற்றும் ருPகுயு யிலும் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட தமிழர்களும் பெரிதளவில் தமிழ் மக்களுடைய ஆதரவினைப்பெற இயலாமல் போனது. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளுள் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சியினர் பாராட்டப்படவேண்டியவர்கள். காரணம் அக்கட்சியினுடைய தலைவரான டக்ளஸ் தேவானந்தா தனது கொள்கையில் இருந்து ஒருபோதும் மாறவில்லை. அதனால்தான் தொடர்ந்தும் அவரால் ஒரு ஆசனத்தையேனும் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ”கோவணம் கட்டினாலும் தமிழன் கொள்கைமாறக்கூடாது’ என்று வரலாற்றில் இடம்பிடிக்கவும் காரணமாக அமைகின்றார்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதிலும் டக்ளஸ் தேவானந்தா யாழில் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முஸ்லீம் தலைவர்களை எடுத்துக்கொண்டால் இவர்களும் தமிழ்பேசும் மக்களாகவே இருக்கிறார்கள். ஆனால் சிங்களவர்களுடன் இணைந்து தேசியம் பேசி வருவதனால் நிலையான கொள்கையற்றவர்களாக இருக் கின்றார்கள். ஆனால் மொழி ரீதியாக இவர்கள் ஒன்றுபட்டும் மத ரீதியாக வேறுபட்டவர்களாக இருக்கும் அதே வேளை தற்போது இவர்கள் தாம் இரண்டும் வேறு என்ற ரீதியில் அரசியலில் ஈடுபடுகின்றார்கள். தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் சரியான தலைமைத்துவம் அற்று செயற்படுகின்றார்கள். தேசியத்தலைவர் என்கிறார்கள். அஷ்ரப் அவர்கள் இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயற்பட்டமையை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். ஆனால் ஹக்கீம், ரிஷாத் போன்ற இவ்விரு தலைமைகளும் தேசியத்தலைவர் பிரபாகரனோடு ஒப்பிடுவதற்குத் தகுதியற்றவர்கள். உலக வல்லரசுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பிரபாகரனின் போராட்டம், செயற்பாடுகள், அவரது இலட்சியம் பற்றி நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

அந்தவகையில் இன்று சர்வதேச விசாரணை பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இனப்படுகொலைகள் நடத்தப்பட்டது என்ற ரீதியில் ஐ.நாவரை விசார ணைகள் இடம்பெறுகிறது. இது தேசியத்தலைவரின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். அந்தவகையில் இன்று பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைத்துத் தமிழ் வேட்பாளர்களும் தேசியத்தலைவரின் கொள்கைகளை முன்வைத்தே செயற்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்கின்ற அடிப்படை உரிமைகளுட னேயே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செயற்படுகிறது. எதிர்வரும் காலங்களில் இக்கோட்பாடுகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதுடன் அவர்களால் தொடர்ந்தும் அரசியலில் ஆதிக்கம் செலுத்த இயலாம் போகும்.

தமிழினத்தின் விடுதலைக்காக இறுதிவரை களமாடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்பது சர்வதேசத்திற்கும் தெரியும். ஒருவிடயம் என்னவெனில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பதிவு செய்கின்ற விடயம் தொடர்பில் தமிழரசுக்கட்சி கவனத்திற் கொள்ளவேண்டியது அவசியமாகும். இதனைப் பதிவுசெய்வதன் மூலம் 75வீதம் பாதகமான தன்மைகளே காணப் படுகின்றது. இதற்குத் தமிழரசுக்கட்சி மாற்றுவழிகளைக் கையாள்வது சிறந்தது. இன்று தமிழினத்தின் விடிவுக்காகப் போராடி மரணித்த அனைத்து மாவீரர்களின் கனவுகளும் தமிழ் மக்களுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்கவேண்டும் என்பதே. தமிழ்மக்களின் விடிவுக்காகவும், தமிழ் மக்களின் இறைமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் அரசிற்கு விலைபோகாது தொடர்ந்தும் அவர்களது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது அத்தியாவசியமான தொன்றாகும்.

இரணியன்

 

 

 

 

SHARE