தேசியப்பட்டியலுக்காக தமிழீழ விடுதலை இயக்கம் நால்வரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது

208

 

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இரண்டு தேசியப்பட்டியில் ஆசனங்களில்

ஒன்றை தமக்கு வழங்க வேண்டும் என கோரி 4 பேரின் பெயர்களை தமிழீழ விடுதலை

இயக்கமான டெலோ தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கும் அதன் தலைவர்

இரா. சம்பந்தனுக்கும் பரிந்துரைத்துள்ளது என கட்சியின் தலைவர் செல்வம்

அடைக்கலநாதன் நேற்று (23.8) தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் ஒன்றை கூட்டுக்கட்சிகளுக்கு வழங்க

வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம்

மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பன தமது கட்சிகளின்

பிரமுகர்களுக்கு அவ் ஆசனத்தை வழங்க வேண்டும் என கோரியுள்ளது.

இந்த வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அதன் தலைவர் சுரேஸ்

பிரேமச்சந்திரனுக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழீழ விடுதலை இயக்கம் தமது

கட்சியில் வினோ நோகதாரலிங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும்

வலுவடைந்துள்ள நிலையில் இன்று வவுனியாவில் கூடிய தமிழீழ விடுதலை இயக்கம் இக்

கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்த வினோ நோகதாரலிங்கம், என்.

சிறிகாந்தா, கென்றி மகேந்திரன், கருணாகரன் ஆகியோருக்கு

தேசியப்பட்டிலில் ஒன்றi வழங்க வேண்டும் என கோரி இரா. சம்பந்தனுக்கு கடிதம்

அனுப்பியுள்ளது.

இதன் நிமிர்த்தம் தற்போது இரு ஆசனங்களில் ஒன்றிற்காக 5 பேர் இரு

கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள்

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினரின் விபரம்

அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE