தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி தலைவராக திட்டமிடும் விமல்?

314
நாடாளுமன்றில் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்று கொள்வதற்கான செயற்பாடொன்றை தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச ஆரம்பித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தங்கள் கட்சிக்கு கிடைத்திருக்கும் 5 ஆசனங்களுடன் முன்னணியின் பங்கு கட்சிகளின் ஆதரவு மற்றும் சுதந்திர கட்சியில் தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவை இணைத்து கொள்வதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இம்முறை முன்னணியில் போட்டியிட்ட சுதந்திர கட்சி அல்லாத 11 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

அவர்கள் தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டுள்ளமையினால் சுதந்திர கட்சியில் மேலும் சில உறுப்பினர்களை இணைத்து கொள்வதற்கு தேசிய சுதந்திர முன்னணி திட்டமிட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்கட்சி பதவியை ஒரு போதும் வழங்க விட மாட்டேன் என விமல் வீரவன்ச நேற்று குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE