தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நீர்கொழும்பு ஹோட்டலில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டது.

321

 

தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நீர்கொழும்பு ஹோட்டலில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டது. தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைவதால் அக்கட்சிக்கு வழங்கப்பட வேண்டிய அமைச்சுப் பதவிகள், அரச பதவிகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் விரைவில் பேச்சு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கூட்டத்தின் போது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது, தேர்தல் முறையில் மாற்றம் என்பன குறித்தும் விவாதிக்கப்ட்டது என கொழும்பில் இருந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது

SHARE