தேசிய அரசாங்கம் அமைக்ககூடாது – மகிந்த

364

 

தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க கூடாது என்று மகிந்தராஜபக்ஷவ மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிட்டு, தேர்தலின் பின்னர் தனித்தே ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறவுள்ளார்.

நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற அவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது அவர் இந்த நிபந்தனைகளை விதிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்கும் அவர் எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன இந்த நிபந்தனைகளுக்கு இணங்க தவறினால், மகிந்தவுக்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குழு, தனித்தே தேர்தலில் போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

magindaa

SHARE