தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்கே முன்னுரிமை வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று லண்டனில் தெரிவித்துள்ளார்.

346

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நிர்வாகம் போருக்கு பின்னரான தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்கே முன்னுரிமை வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று லண்டனில் தெரிவித்துள்ளார்.
359222958tata (2)

லண்டன் மெல்பரோ மாளிகையில் நேற்று பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் பிலிப் ஹம்மோண்டை சந்தித்து பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை பற்றி தகவல் வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர்,

தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து கலந்துரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர், பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் நல்லிணக்க செயற்பாடுகளை துரிதப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டுவதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் இதன் போது கூறியுள்ளார்.

அத்துடன் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி செயலணிக் குழுவை நியமிக்க பிரித்தானிய பக்கபலத்தை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தெற்காசியாவின் சிறந்த முதலீட்டு கிராமாக மாற முயற்சிக்கும் இலங்கையின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நேரடியான வெளிநாட்டு முதலீகள் அவசியம் என்பதை வெளிவிவகார மங்கள சமரவீர பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு பின்னர் இலங்கைக்கு உயர்மட்ட விஜயம் ஒன்றை மேற்கொள்ள உத்தேசித்திருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

 

SHARE