தேசிய விருது வென்ற சென்சேஷன் நடிகருடன் இணையும் அட்லீ.. உறுதி செய்த இயக்குனர்

11

 

ஜவான் வெற்றிக்கு பின் அட்லீ வேற லெவலுக்கு சென்று விட்டார் என்று தான் சொல்லவேண்டும். விமர்சன ரீதியாக இப்படம் பின்னடைவை சந்தித்தாலும், வசூலில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாதனை படைத்து வருகிறது.

ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து வேறு எந்த ஹீரோவை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை அட்லீ இயக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதன்படி, புஷ்பா படத்திற்காக தேசிய விருது வென்ற அல்லு அர்ஜுனுடன் அட்லீ கைகோர்க்க உள்ளார் என தகவல் வெளிவந்தது.

உறுதி செய்த இயக்குனர்
அதை அட்லீ ஏறக்குறைய உறுதி செய்யும் வகையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இதில், அல்லு அர்ஜுனுக்காக ஒரு கதைக்களம் வைத்துள்ளதாகவும், கண்டிப்பாக அப்படம் மாபெரும் அளவில் இருக்கும் என்றும் அட்லீ தெரிவித்துள்ளார்.

இதனால் விரைவில் இந்த கூட்டணி அமையவேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

 

SHARE