தேனீர் கொடுத்த பின்னர் நடேசன் உட்பட பலர் சுட்டுக்கொலை… வெளிவரும் உண்மைகள்.

355

 

பின்னர் சரணடையச் சென்ற விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Chandranehru Chandrakanthan

3000 இற்கும் மேற்பட்ட அரசியல்துறை போராளிகளும் 25000 இற்கும் மேற்பட்ட பொதுமக்களும் சரணடையவுள்ளனர் என்ற செய்தி தெரியப்படுத்தப்பட்டு சர்வதேச நாடுகளின் அறிவுறுத்தலுடன் சரணடையவந்தவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் தேனீர் வழங்கப்பட்டு இருக்கவைக்கப்பட்ட பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றிய அனைத்து விடயங்களும் ஐக்கிய நாடுகள் உட்பட முக்கியமான நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் தமிழத்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் இந்த சாட்சியாளரான நேரு எவ்வாறு அமெரிக்காவின் உதவியால் வெளிநாடு சென்றார் என்பது முதல் முழுமையான விபரங்கள் காணொளியில் காணுங்கள்.SHARE