
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், இரட்டை குடியுரிமை பெற்றவர்களான கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது.
இது குறித்து ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே பொதுபல சேனா அமைப்பு ஆரம்பிக்க உள்ள கட்சியின் தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவு செய்யப்பட உள்ளதாக பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பொதுபல சேனா அமைப்பே காரணம் என கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தி வருகிறார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுபல சேனா அமைப்பு, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்ததை தொடர்ந்தும், அவருக்கு சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டது.