தேர்தலில் வென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு!– மகிந்த ராஜபக்ச

137

எதிர்வரும் 17ம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்று தரப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்..

தேர்தல் பிரசாரத்திற்காக தனக்கு சீனாவிடம் இருந்து நிதி கிடைப்பதாக கூறப்படுவதை மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு அமைப்புகள் கூடாக மேற்குலக நாடுகளிடம் இருந்து நிதியை பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனாவிடம் இருந்து தனக்கு நிதி கிடைப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, அதனை நிராகரித்துள்ளதுடன் முடிந்தால், சீனாவிடம் இருந்து தனக்கு நிதியை பெற்று தருமாறு குறிப்பிட்டுள்ளார்.

எவருடனும் தான் இரகசியமான தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்காக தான் தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் மேற்குலக நாடுகள் தனக்கு ஜனநாயகத்தை கற்பிக்க அவசியமில்லை எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

வடக்கில் வாக்குகளை பெற முடியாததே தான் ஜனவரி 8ம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்விய முக்கிய காரணம் எனவும் தேர்தலில் தோல்விடைவோம் என்று தெரிந்தும் வடக்கு மாகாண சபையை ஏற்படுத்தி அங்குள்ள தமிழ் மக்களுக்கு வாக்குரிமையை வழங்கியதாகவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்று தரப் போவதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.

SHARE