தேர்தல் சட்டவிதிகளை மீறி இடமாற்றம் செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் – என். வேதநாயகன்

142
தேர்தல் சட்டவிதிமுறைகளுக்கு மீறி எந்த இடமாற்றங்களும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன், இவ்வாறான இடமாற்றங்கள் தொடர்பில் தனக்கு அறிவித்தால் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றுக் காலை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அவரிடம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விடமாற்றங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தற்போது இடமாற்றங்கள் வழங்க முடியாது உள்ள போதும் இடமாற்ற உத்தரவுகள் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு வந்துள்ளது தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான இடமாற்றங்கள் தேர்தல் காலப் பகுதிகளில் வழங்க முடியுமா? ஏன ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த அவர், தேர்தல் சட்டத்தின் படி தேர்தல் காலப்பகுதியில் எந்த இடமாற்றங்களும் வழங்க முடியாது. இதனை தேர்தல் ஆணையாளரும் அண்மையில் அறிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு மீறி இடமாற்றங்கள் வழங்கப்பட்டால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும். இதன்படி சட்டவிதிமுறைகளை மீறிய இடமாற்றங்கள் தொடர்பில் எனக்கு அறிவித்தால் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் புதிய வாக்களிப்பு நிலையங்கள்

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பின் போது இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளுக்கான புதிய வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இம்முறையும் வழமைபோன்று யாழ்.மத்திய கல்லூரியே வாக்கெண்ணும் மத்திய நிலையமாக தெரிவு செய்யப்பட்டுளள்து என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மற்றும் வடமாகாண சபைக்கான தேர்தலின் வாக்கென்னும் நிலையமாக யாழ்.மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டு அங்கு வாக்கெண்ணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இம்முறையும் வாக்கெண்ணும் நிலையமாக யாழ்.மத்திய கல்லூரியே தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பரீட்சை காலம் இது என்பதால் அங்கு வாக்கென்னும் நடவடிக்கை மேற்கொள்வது சம்மந்தமாக பாடசாலை அதிபர், கல்வித்திணைக்களத்திருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பரீட்சை தொடர்பான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று வாக்களிப்பு நிலையங்களுக்காக பாடசாலைகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் நடத்தி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இராணுவ உயர்பாதுகாப்பு வலையமாக இருந்து அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வலி.வடக்கு மற்றும் வளலாய் பகுதிகளில் உள்ள மக்களுக்கு அப்பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதன்ப மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் புதிய வாக்ளிப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் இம்முறை வாக்களிப்பு நிலையங்களின் தொகை அதிகரிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

SHARE