தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் சட்ட மீறல்களில் ஈடுபட்ட 63 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட 23 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் வாக்களித்தவர்கள், சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், வாக்காளர்களை அச்சுறுத்தியவர்கள், அழுத்தங்களை பிரயோகித்தவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.