தேர்தல் பிரசாரத்துக்காக மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மடுதேவாலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஜனாதிபதியை வரவேற்றார். அங்கு இடம்பெற்ற பிரார்த்தனையில் கலந்துகொண்டு ஜனாதிபதி மடு அன்னையை வழிபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு அருட்தந்தையர்களுடன் கலந்துரையாடினார்.