தேர்தல் விஞ்ஞாபனத்துடன் மைத்திரி…

404
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன் என எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக எதனையும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் குறிப்பிடாததும் குறிப்பிடத்தக்கது.

அவர் 100 நாட்களுக்குள் புதிய தேசம் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் வருமாறு

1994 இலிருந்து நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக மக்களுக்கு உறுதியளித்துவந்துள்ள போதிலும் ,அதனை அரசமைப்பு ரீதீயாக மேற்கொள்ள முடியவில்லை. நாடாளுமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் காணப்பட்ட போதிலும்,அதனால் கடந்த 23 வருடங்களாக அதனை நிறைவேற்ற முடியவில்லை.

பிரதான கட்சியின் தலைவரான ஜனாதிபதியே அதற்கான தலைமைத்துவத்தை வழங்கவேண்டும், அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்,இதற்காக ஜனாதிபதி முக்கிய அரசியல் கட்சிகளுடன் உடன்பாட்டிற்கு வரவேண்டும், இந்த பணியை நிறைவேற்றவதற்காகவே நான் பொதுவேட்பாளராக போட்டியிட முன்வந்துள்ளேன்.
என்னால் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினது, ஆதரவை பெற முடியும்,ஐக்கிய தேசிய கட்சி இதற்கான ஒப்பந்தமொன்றில் என்னுடன் கைச்சாத்திட்டுள்ளது.

ஜே.விபி 1994 முதல் எங்களுடைய கட்சியுடன் இது தொடர்பாக இணக்கப்பாட்டை கொண்டுள்ளது. ஜாதிஹ ஹெல உறுமயவும் இது தொடர்பான உடன்பாட்டிற்கு வந்துள்ளது.ஆகவே நான் இது குறித்து ஏனைய கட்சிகளுடன் ஆலாசித்து 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவேன்,

நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதற்கான ஆவணங்களாக மாதுளவாவே சோபித தேரரின் நீதீயான சமூகத்திற்கான இயக்கத்தால் முன்வைக்கப்பட்ட ஆவணங்களையும், அத்துரலிய ரத்தினதேரரின் தலைமையிலான குழுவால் முன்வைக்கப்பட்ட அரசமைப்பின் 19 திருத்தத்திற்கான யோசனைகளையும்,ஐக்கிய தேசிய கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனைகளையும் நான் பின்பற்றுவேன்.

புதிய முறையின் கீழ் நாடாளுமன்றமே முக்கியம்பெறும், ஜனாதிபதி நாட்டின் ஏனைய பிரஜைகளை போன்று சட்டத்தின் முன் சமனானவராக காணப்படுவார், சர்வஜனவாக்கெடுப்புடன் மாத்திரமே மாற்றப்படவேண்டிய

அரசமைப்புமாற்றங்களில் நான் கைவக்கமாட்டேன், நாட்டின் இறமை , பாதுகாப்பு மற்றும் ஸதிரத்தன்மைக்கு ஊறுவிளைவிக்க கூடிய அரசமைப்பு மாற்றங்கள் எதனையும் செய்யமாட்டேன் ,

நாட்டின் தேர்தல் முறையிலும் மாற்றங்கள் செய்யப்படும்,அதேவேளை நாட்டின் நல்லாட்சியை கண்காணிப்பதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும்.

வெளிவிவகார கொள்கை

2009 இராணுவவெற்றிக்கு பின்னர் எமது வெளிவிவகார கொள்கை முழுமையான குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை முழு உலகும் அறிந்த விடயம்.

முறையான வெளிவிவகார கொள்கை எம்மிடத்தில் இல்லாத அதேவேளை இராஜதந்திர செயற்பாடுகள் குறித்த அறிவும் திறமையும் உள்ளவர்கள் எமது இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்படவில்லை. அவர்கள் தமது கிராமங்களில் செயற்படுவது போன்று வெளிவிவகார செயற்பாடுகளை முன்னெடுக்க முயல்கின்றனர்.இலஞ்சத்தையும், காடைத்தனத்தையும் பயன்படுத்துகின்றனர்.இதன் காரணமாக இலங்கை குறித்த சர்வதேஅபிப்பிராயத்தில் வீழ்ச்சியேற்பட்டு;ள்ளது, நாட்டை உடனடியாக இதிலிருந்து விடுவிக்கவேண்டும்.

இதற்காக தேசத்தின் கருத்திற்கேற்ப நாட்டின் வெளிவிவகார கொள்கை உருவாக்கப்படும்,நூறு நாட்களுக்குள் வெளிவிவகார சேவைக்கு அரசியல்ரீதீயாக நியமனம்பெற்ற அனைவரினது சேவையும்

இரத்துச்செய்யப்படும்,ஆசியாவின் முக்கிய நாடுகளுடன் சமமான உறவு ஏற்படுத்தப்படும்.இந்தியாவின் பன்முகத்தன்மையை கருத்தில்கொண்டாதாக எமது இந்திய கொள்கை அமைந்திருக்கும்.இந்தியாவிடம் சார்ந்திருக்காத அதேவளை அதற்கு விரோதமற்ற கொள்கை பின்பற்றப்படும்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன்.MS-MeetingMS-Meeting-01MS-Meeting-02MS-Meeting-03MS-Meeting-04MS-Meeting-05MS-Meeting-06MS-Meeting-07MS-Meeting-08MS-Meeting-09MS-Meeting-10MS-Meeting-11MS-Meeting-12MS-Meeting-13MS-Meeting-14MS-Meeting-15MS-Meeting-16MS-Meeting-17MS-Meeting-18

SHARE