தேவையற்ற கொலட்ஸ்ராலை குறைக்கும் குடைமிளகாய்

471
குடைமிளகாயில் வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் உள்ளது.இங்கிலாந்தில் ‘சில்லி பெப்பர்’ என்றும், அமெரிக்கா மற்றும் கனடாவில் ‘பெல் பெப்பர்’ என்றும், அவுஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் ‘காப்சிகம்’ என்றும் அழைக்கிறார்கள்.

குடைமிளகாய் காரமற்றது என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை.

குடைமிளகாயின் பயன்கள்

வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுகிறது.

கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும், அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.

பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவைகளை கட்டுப்படுத்தும் சக்தியும் குடைமிளகாயில் இருக்கிறது.

குடைமிளகாயில், ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.

இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.

குடைமிளகாயில் உள்ல கேயீன் என்னும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.

100 கிராம் குடை மிளகாயில் இருக்கும் சத்துக்கள்

புரோட்டின் – 0.99 கிராம்.

சக்தி – 31 கலோரி.

சோடியம் – 4 மி.கிராம்.

கொலஸ்ட்ரால் – இல்லை.

கொழுப்பு – 0.3 மி.கிராம்.

தாதுச் சத்து – 6.02 மி.கிராம்.

பொட்டாசியம் – 211 மி.கிராம்.

மெக்னீசியம் – 12 மி.கிராம்.

வைட்டமின் சி – 127.7 மி.கிராம்.

கால்சியம் – 7 மி.கிராம்.

இரும்பு – 0.43 மி.கிராம்.

குடைமிளகாய் சாதம்

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் பட்டை மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, பின் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை போட்டு, தீயை குறைவில் வைத்து 4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, பின் சாதம் மற்றும் முந்திரியைப் போட்டு, நன்கு 2 நிமிடம் வதக்கி விட்டு, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான வெண்ணெய் மற்றும் குடைமிளகாய் சாதம் ரெடி.

SHARE