தேவையில்லாத வதந்திகளை நம்பாதீர்கள். குறளரசனுக்கு ஆதரவாக பேசிய அனிருத்

323

சிம்புவின் நடிப்பில் நீண்ட காலமாக படப்பிடிப்பு முடியாமலே போய் கொண்டிருக்கும் படம் இது நம்ம ஆளு.

இப்படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே மீதமுள்ளதாம். இந்நிலையில் படத்தில் குறளரசனுக்கு இசையமைக்க தெரியவில்லை, அனிருத் தான் முழு உதவியும் செய்தார் என்ற தகவல் பரவிவந்தது.

இதை கேள்விப்பட்ட குறளரசன் தயவு செய்து இது மாதிரி பொய்யான விஷயத்தை பரப்பாதீர்கள் என்று சமீபத்தில் தெரிவித்தார்.

இதுநாள் வரை அனிருத்திடம் இருந்து எந்தவித மறுப்பும் வரவில்லை. இதனால் சந்தேகம் வலுத்தது.

இந்நிலையில் இன்று அனிருத் குறளரசனுக்கு ஆதரவாக பேசியுள்ளார் நான் இது நம்ம ஆளு பாடல்கள் முழுவதும் கேட்டுளேன், நன்றாக வந்து இருக்கிறது என்றும் தேவையில்லாத வதந்திகளை நம்பாதீர்கள் எனவும் கூறியுள்ளார்.

SHARE