தைராய்டு சுரப்பியினால் ஏற்படும் நோய்களுக்கான அறிகுறிகள்

419

 

உடல் சோர்வு: தூங்கி எழுந்தவுடன் அசதியாக இருப்பது. 8,10 நேரம் தூங்கிய பின்பும் தூங்காதது போல் உணர்வது. நாள் முழுவதும் வேலை செய்ய முடியாமல் சிரமபடுவது.

உடலின் எடை மாற்றங்கள்
: மிக குறைந்த உணவு உண்டும், உடற்பயிற்சிகள் நிறைய செய்தும் எடை குறையவில்லை என்றாலும் நன்றாக சாப்பிட்டும் அல்லது எல்லோர் சாப்பிடுவதை காட்டிலும் அதிகம் சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருப்பது. (தைராய்டு சுரப்பி நீர் குறைவினாலும் தைராய்டு சுரப்பி நீர் அதிகமானாலும் ஏற்படும்.)

மனத்தளர்வு படபடப்பு:
 திடீரென அதிகமாக பயப்படுதல், சாதாரண மாத்திரைகளுக்கு கட்டுப்படாத மனத்தளர்வு.

கொழுப்புச் சத்து: 
கொழுப்பு சத்து உடலில் மிக அதிகரிப்பதும், உணவில் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிப்பது தைராய்டு நீர் குறைவினாலும் கொழுப்பு சத்து உடலில் அளவிற்கு மிகவும் குறைவாக இருப்பதும் நன்றாக சாப்பிட்டும் கூடாமல் இருப்பதும் தைராய்டு சுரப்பி அதிகமாக செயல்படுவதினாலும் ஏற்படும்.

குடும்ப பாரம்பரியம்: 
நமது குடும்பத்தில் உள்ள மூத்த நபர்களுக்கு தைராய்டு சம்பந்த நோய் இருந்திருந்தால் அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தைராய்டு நோய் இருக்க வர வாய்ப்புகள் மிக அதிகம். எனவே பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

குழந்தை பெற முடியாமல் இருப்பதும், மாதவிடாய் சரியாக இல்லாததும்: மாதவிடாய் நாள் அதிகரிப்பதும், மாதம் மாதம் சரியாக வராததும், அதிக வலியுடன் வருவதும் தைராய்டு குறைபடுவதால் காணப்படும். நாள் குறைந்து அடிக்கடி மாதவிடாய் வருவதும் சரியாக பட்டும் படாமலும் இருப்பதும் தைராய்டு நீர் அதிகமானால் ஏற்படும். இரண்டு காரணங்களும் குழந்தை உண்டாக முடியாத நிலை ஏற்படும்.

குடல் பாதிப்பு:
பசி இன்னம், மலச்சிக்கல் தைராய்டு நீர் குறைபாடு உள்ளவர்களுக்கும் அதிக பசி மற்றும் அடிக்கடி மலம் கழிப்பதும் தைராய்டு நீர் அதிகரிப்பதினாலும் ஏற்படும்.

முடி மற்றும் தோலில் ஏற்படும் மாற்றங்கள்
: முடியும் நமது உடலின் தோல் பகுதியும் தைராய்டு நோயினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாகும். முடி அடர்த்தி குறைவும், வலு இலந்து, வளர்ந்து முடி உடைந்து போவதும், அதிகமாக உதிர்வதும் முக்கிய அறிகுறியாகும். நமது உடலின் தோல் கனம் கூடி, தடிமனாகவும் எண்ணை பசையற்று வரண்டு போவதும், தோல் உதிர்வதும், தைராய்டு நோய் அறிகுறியாகும். (குறைபாடு உள்ளவர், தோல் மிக மெல்லியதாகவும், மெதுவாகவும் ஆகும் அதிகம் சுரப்பவர்களுக்கு)

கழுத்து வீக்கமும், அசாதாரண நிலையும்
: கழுத்தின் முன் பகுதியிலோ அல்லது வலது, இடது புறமோ கட்டி காண்பதும் வலியுடன் கூடிய, கழுத்து அசைவு கடினத்தன்மையும் ஏற்படும்.

தசை, மூட்டு வலி: கை, கால்களில் தசையில் (சதை பகுதி) வலி ஏற்படுவதும், கை, கால், விரல்களுக்கு முன்பு உள்ள பாகத்தில் வலியும் விரல்களை சரியாக அசைக்க முடியாமலும் வலி ஏற்படும்.

SHARE