தொகுப்பாளினியாக கலக்கும் பிரியங்காவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

7

 

விஜய் தொலைக்காட்சி என்றாலே முதலில் அதில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் தான் முதலில் நியாபகம் வரும். அதன்பிறகு அதில் வந்த தொகுப்பாளர்கள், நடுவர்கள் என நியாபகம் வரும்.

அப்படி தொகுப்பாளினிகள் என்று நாம் நினைத்தாலே நமக்கு முதலில் டிடி நினைவுக்கு வருவார், அவருக்கு அடுத்து இப்போது டிரெண்டில் இருப்பது தொகுப்பாளினி பிரியங்கா தான்.

எப்போதும் கலகலப்பாக தன்னை யார் கலாய்த்தாலும் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை நடத்துவார். அவரும் மாகாபா ஆனந்தும் இணைந்து சூப்பர் சிங்கரில் செய்யும் அட்டகாசங்கள் ஏராளம்.

இப்படி முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பற்றி கடந்த சில நாட்களாக விவாகரத்து செய்தி பரவி வந்தது. அதற்கு அவரும் ஒரு வீடியோ மூலம் பதிலடி கொடுத்துவிட்டார்.

சொத்து மதிப்பு

தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் தனியார் நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கிவரும் பிரியங்காவின் சொத்து மதிப்பு $1.16 மில்லியன் என கூறப்படுகிறது.

SHARE