தொடரும் வாழ்வாதார நலத் திட்டத்தில் கோழி வளர்ப்பை மேம்படுத்தல் மன்னார் மாவட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார் வைத்திய கலாநிதி சி. சிவமோகன்
வன்னிகுறோஸ் சுகாதார நிறுவனத்தின் தொடரும் வாழ்வாதார நலத் திட்டத்தில் கோழிவளர்ப்பை மேம்படுத்துவதற்காக 30.06.2015 அன்று மன்னார் சாந்திபுர கிராமத்தில் ஒரு தொகுதி பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளையும் அதற்குரிய உபகரணங்களையும் வன்னிகுறோஸ் சுகாதார நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் வழங்கி கௌரவித்திருந்தார். மேற்படி நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டடைமப்பின் நகர உறுப்பினர் குமரேசன், கால் நடை திணைக்கள பொறுப்பு வைத்தியர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.