தொண்டமானின் குடும்பத்தை இந்தியாவுக்கே அனுப்புங்கள்! இவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள்: மலையகத்திலிருந்து ஒரு குரல்

406

ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தும் பயனில்லை. தொண்டமானின் குடும்பத்தை இந்தியாவுக்கே அனுப்புங்கள், இவர்கள் மரத்துக்கடியில் இருந்து கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் என மண்சரிவில் பாதிக்கப்பட்ட ஒருவர் கோபத்தில் திட்டித்தீர்த்துள்ளார்.

கொஸ்லாந்த மண் சரிவில் தனது குடும்பத்தை பறிகொடுத்த நபர் ஒருவர் இவ்வாறு கோபத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை பேசியுள்ளார்.

“நானும் மண்ணுக்குள் மண்ணாகியிருந்தால் இப்பொழுது  உங்கள் முன் முகம் கொடுத்து பேசியிருக்கமாட்டேன்.

எமது அரசியல்வாதிகள் எல்லோரும் தகுதியற்றவர்கள். தமிழ் மக்களுக்காக வந்து குரல் கொடுக்கவில்லை.

ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தும் பயனில்லை. தொண்டமானின் குடும்பத்தை இந்தியாவுக்கே அனுப்புங்கள், இவர்கள் மரத்துக்கடியில் இருந்து கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள். இவர்கள் இப்படி தான் நடந்து கொள்வார்கள்.

தேர்தல் காலங்களில் எம்மக்களை வைத்து கலந்துரையாடல் செய்கின்றனர். அதன்போது அங்கிருக்கும் பொலிசாரை தாக்குகின்றனர். எம் அரசியல்வாதிகள் இதனை பார்த்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

தொண்டமான் பொலிஸ் அதிகாரியையே தாக்குகின்றார். அதனால் மக்கள் அவரை பெரிய தலைவர் என்று நினைத்துக் கொள்கின்றனர். அது அவ்வாறு இல்லை. அரசியல் என்பது வெறும் ஏமாற்று சித்து வேலை.

தொண்டமான் சரியான தலைவர் என்றால் வந்து பாருங்கள், ஜனாதிபதி வந்து பார்த்து விட்டு போனார். அவரால் இவ்விடத்தில் ஐந்து நிமிடம் கூட இருக்க முடியவில்லை.

நாட்டு மக்களை பார்க்க கூட நேரமில்லாத அளவுக்கு அவருக்கு என்ன வேலை இருக்கின்றது.

இவர்களின் வேலை, செயல்கள் எல்லாம் ஏ.சி அறைகளுக்குள் மட்டும் தான். எனக்கு நேர்ந்த அநியாயம் எவருக்கும் நேரக்கூடாது என பாதிக்கப்பட்ட அந்த நபர் அழுது புலம்பியுள்ளார்.

 

 

SHARE