இந்த நிலையில் கடந்த 2004–ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். மகன்கள் இங்கிலாந்தில் தாயார் ஜெமீமாவுடன் தங்கியுள்ளனர். விவாகரத்து ஆனதைத் தொடர்ந்து மறுமணம் செய்ய போவதாக இம்ரான்கான் தெரிவித்து இருந்தார்.
அதன்படி கடந்த வாரம் பி.பி.சி. டி.வி.யின் முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரேஹம் (41) என்பவரை திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், இது உறுதிப்படுத்தப்படவில்லை. ரேஹமும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த ரகசிய திருமணம் பற்றி பல்வேறு யூக செய்திகள் வெளிவந்த நிலையில், இன்று இம்ரான் கான்-ரேஹம் திருமணம் எளிமையாக நடைபெற்றது. இஸ்லாபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள பானி காலா பண்ணை வீட்டில் நடந்த இந்த திருமணத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
திருமணம் அல்லது வலிமா வரவேற்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்றும், ஏழைக் குழந்தைகளுக்கு நாளை உணவு வழங்கப்படும் என்றும் இம்ரான் கான் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இம்ரான் கான்-ரேஹம் ரகசிய திருமணம் குறித்து வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்