தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது

89

 

பேருந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்களிடமிருந்து 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

காவல்துறையினர் தீவிர விசாரணை
பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பட்டு வந்த நிலையில், யாழ்ப்பாண குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக்க தலைமையிலான குழுவினர் மூன்று நபர்களை கைது செய்தனர்.

யாழ் நகரை அண்டிய வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம் சிவலிங்க புளியடியை சேர்ந்த 24, 31,33 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு காவல்துறையினர் சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலும் திருடப்பட்ட பல கையடக்க தொலைபேசிகளை மீட்கவுள்ளதாக தெரிவித்தனர்.

SHARE