தோல்விக்கு ஒரு தவறு செய்தால் போதும்…

331
ஒரு தவறு செய்தால் கூட தோல்வி ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.காலிறுதி போட்டியில் வங்கதேச அணியுடன் இந்திய அணி மோதுகிறது.

ஆட்டத்துக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் சுரேஷ் ரெய்னா கூறியதாவது. வங்கதேச அணியை நாங்கள் சுலபமாக நினைக்கவில்லை. காலிறுதிப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றேயாக வேண்டும். ஒரு தவறு செய்தால் கூட போதும் தோல்வி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு பந்தையும் மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும். வங்கதேசத்துக்கு எதிராக காலிறுதி ஆட்டத்தில் ஆடுவது பற்றி எனக்கு உற்சாகமாக இருக்கிறது.

எங்களுக்கு எதிராக வங்கதேசம் நன்றாக ஆடியுள்ளது. 2007 உலகக்கிண்ண போட்டியிலும், ஆசியக்கிண்ண போட்டியிலும் இந்திய அணிக்கு எதிராக வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் இதையெல்லாம் நாங்கள் சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.

SHARE