தோல்வியால் கலங்கிய கோலியை அணைத்து ஆறுதல்படுத்திய அனுஷ்கா! வைரலாகும் புகைப்படம்

16

 

உலகக்கோப்பையை இழந்ததால் கலங்கிய விராட் கோலியை மனைவி அனுஸ்கா சர்மா கட்டியணைத்து ஆறுதல் கூறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அவுஸ்திரேலியா சாம்பியன்
அகமதாபாத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

இந்திய அணி நிர்ணயித்த 241 ஓட்டங்கள் இலக்கினை அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் எட்டி, 6வது உலகக்கோப்பையை கைப்பற்றியது.

வைரல் புகைப்படம்
இந்த தோல்வியால் இந்திய வீரர்கள் களத்திலேயே சோகத்தில் ஆழ்ந்தனர். ரசிகர்களுக்கும் இது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

நட்சத்திர வீரர் விராட் கோலியும் கலக்கம் அடைந்தார். உடனே அவரது மனைவி அனுஷ்கா சர்மா அவரிடம் சென்று கட்டியணைத்து ஆறுதல்படுத்தினார்.

இதுதொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

SHARE